“டிசி” திரைப்பட விமர்சனம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா ஏ.கே. பார்வதி, கஸ்தூரி ராஜா, தலைவாசல் விஜய், கிரிஷ் தயால், அவினாஷ் ரகுதேவன், ஜவஹர் சக்தி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “டி.சி”  இதுவரை இயக்குனராக திரையுலகில் வலம்வந்த  லோகேஷ் கனகராஜ், இப்படத்தின் மூலம் ஒரு நடிகராக திரைவானில் சிறகடித்து பறக்கிறார். கதைப்படி லோகேஷ் கனகராஜ் ஒரு போராளிக் கூட்டத்திற்கு தலைவராக இருக்கிறார். காவல்த்க்துறையினரின் அட்டூழியங்களை எதிர்த்த்கு போராடுகிறார். சாலையில் ஒரு ஏழை தம்பதிகள் நடந்து வருகிறார்கள். அவர்கள்தனது ஒரே மகனை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதற்க்காகதனது சொத்துக்களை விற்று ரூ.7 லட்சத்துடன் அந்த சாலையில் நடந்து வருகிறார்கள். இதை தெரிந்து கொண்ட காவலர்கள் அந்த பணத்தை அந்த ஏழையிடமிருந்து பறிமுதல் செய்கிறார்கள். பணத்தை கொடுக்க மறுத்த அந்த ஏழை தம்பதிகளையும் காவலர்கள் சுட்டுக் கொள்கிறார்கள். இதையடுத்து அந்த ஏழை சிறுவனை படிக்கவைக்க வேண்டும் என்று லோகேஷ் கனகராஜ் சபதம் ஏற்கிறார். காவல்த்துறையினருடன் போராடும் லோகேஷ் கனகராஜ் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் மீதிக்கதை. இயக்குனர்  லோகேஷ் கனகராஜ், நடிகராக புதிய பரிமாணம் எடுத்து அசத்தியுள்ளார். அதிரடி காட்சிகளில் அவரின் உசல்மொழியும் உணர்வுபூர்வமான நடிப்பும் பார்வையாளர்களை மெய்மறக்க செய்கிறது.

வாமிகா கபி அசத்தி இருக்கிறார். சேலை கட்டிய புயலாய் எதிரிகளிடம் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார். எப்போதுமே கையில் ‘பாதுகாப்பு கவசத்தை’ வைத்திருக்கும் அவர், லோகேஷ் கனகராஜுக்கு பாதுகாப்பாக நிற்கும் இடங்கள் சிலிர்ப்பு. ஓரிரு காட்சிகளே வந்தாலும் சஞ்சனா நினைவில் நிற்கிறார்.  அடிக்கடி வெள்ளை சுருட்டை புகைப்பது பார்வையாளர்களை சங்கடப் படுத்துகிறது. இக்காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

கிரிஷ் தயால், தலைவாசல் விஜய், கஸ்தூரி ராஜா, அவினாஷ் ரகுதேவன் என அனைவருமே எதார்த்த நடிப்பை கொட்டியுள்ளனர். முகேசின் ஒளிப்பதிவில் காட்சிகள் பரபரப்பு. அனிருத் இசை ஆட்டம் போட வைத்திருக்கிறது. மவுன ராகங்கள்…’ பாடலை மீண்டும் ஒருமுறை கேட்க தூண்டுகிறது