விஜய் சேதுபதி தயாரிப்பில் எம்.மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அபி நக்ஷத்ரா, ரிஷா ஜேகப்ஸ், பார்வதி, சிந்து, மிலிந்த் சோமன், முத்து குமார், சிங்கம்புலி, வடிவேல் முருகன், பாலாஜி சக்திவேல், இர்ஷாத் அலி, சுதேவ் நாயர், அரிஸ்டோ சுரேஷ் சுனிதா, சந்திரன், ஆர். அமரேந்திரன், சாதனா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “முத்து என்கிற காட்டான்’. ஒரு கிராமத்திலுள்ள காவல்நிலையத்தில் பல வருடங்களாக வழக்குப்பதிவுகளே இல்லாமல் இருக்கிறது. அதனால் அந்த காவல்நிலையத்தை மூடப்போவதாக அரசு அறிவிப்புக்கு காத்திருக்கிறார்கள் அங்குள்ள காவலர்கள். இந்நிலையில் அக்கிராமத்தின் பொட்டக்காடாக இருக்கும் ஒரு பாறையில் விஜய் சேதுபதியின் துண்டிக்கப்பட்ட தலை மட்டும் இருக்கிறது. உடல் பகுதியை காணவில்லை. தலை அருகே ஒரு பையில் இரண்டு லட்ச ரூபாயும் ஒரு கடிதமும் இருக்கிறது. அக்கடிதத்தில் “என்னை புதைத்தவர்கள் இந்த பணத்தை எடுத்துக் கொள்ளலாம்” என்று எழுதி இருக்கிறது. தலையை கைப்பற்றிய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்குகிறார்கள். கொலை செய்யப்பட்ட விஜய் சேதுபதி யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலை செய்தது யார்? துண்டிக்கப்பட்ட விஜய் சேதுபதியின் உடல்பகுதி கிடைத்ததா? இல்லையா? என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலை கண்டுபிடிக்க உதவி ஆய்வாளரும் ஏட்டு சிங்கம் புலியும் துப்புதுலக்க ஊர் ஊராக சென்று விசாரிக்கிறார்கள். இதுதான் கதை. காவலர்களின் விசாரணையில் மதுரையில் நடன நிகழ்ச்சி நடித்திவரும் பெண்களுக்கு பாதுகாவலானவும், கடிகார பழது நீக்குபவராகவும் பாடசாலை காவலாளியாகவும். ஆட்டுப்புளுக்கை வாங்கி அதற்குப்பதிலாக பண்டபாத்திரங்களை கொடுப்பவராகவும் சிறந்த குணநலன்களை கொண்டவராகவும் கேரளத்தில் யானைப் பாகனாகவும் மற்றவர்களுக்கு உதவிகள் செய்பவராகவும் விசாரணையில் தெரியவருகிறது. இக்கதையை 10 பாகங்களாக ஜியோ ஸ்டார் இணையதளத்தின் மூலம் இயக்குநர் சொல்லியிருக்கிறார். ஒவ்வோரு கட்டத்திலும் விஜய்சேதுபதி ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிடுகிறார். மிகவும் இயல்பான நடிப்பை கொடுத்து நேரம்போவதையே தெரியாமல் செய்துவிடுகிறார். ஒரு புரோட்டா கடையை அந்த முதலாளியிடமிருந்து அதக விலைக்கு வாங்கி அக்கடையை அந்த ஓட்டலில் வேலைபார்க்கும் புரோட்டா மாஸ்டருக்கே சொந்தமாக்கிவிட்டு செல்கின்ற காட்சியில், விஜய் சேதுபதி நடிக்கவில்லை. அவரின் உண்மையான குணத்தை திரையில் காட்டியிருக்கிறார். விஜய் சேதுபதி குறித்து நடத்தப்படும் ஒவ்வொரு நிகழ்வும் பார்வையாளர்களின் ஆவலை தூண்டுகிறது. இதில் நடித்த அத்தனை நடிகர்களும் கதாபாத்திரத்தோடு ஒன்றென கலந்துவிட்டார்கள். குறிப்பாக இயக்குநர் பாலாஜி சக்திவேலுவின் நடிப்பு கைத்தட்ட வைக்கிறது. சிங்க்ம்புலியின் நகைச்சுவை சிந்திக்க வைகிறது. ஒவ்வொரு தொடரிலும் அரசியலை சீண்டிவிட்டு செல்கிறார் இயக்குநர். படத்தொகுப்பும் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்தை தொய்வில்லாமல் நகர்த்தி செல்கிறது.
“முத்து என்கிற காட்டான்” திரைப்பட விமர்சனம்
