லெஜண்ட் சரவணன் தயாரிப்பில், ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜண்ட் சரவணன், பொன்மாறன், ஷாம், ஆண்டிரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புட், லைய், பகாபலி பிரபாகரன், அமிர்தா ஐயர், வி.டி.வி.கணேஷ், ஐஸ்வரியா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “லீடர்”. துறைமுகத்தில் வெடிமருந்து பொருட்கள் கடத்தும் தொழிலைசெய்கிறார் அரசியல் செல்வாக்குமிக்க வில்லன். வில்லனுடைய கார்களை பழுதுநீக்கும் வேலை செய்கிறார் மெக்கானிக் லெஜண்ட் சரவணன். அந்த வில்லனுடைய நடவடிக்கைகளை கண்காணிக்க அவரின் காரில் ஒலிப்பதிவு மற்றும் தடங்காட்டி கருவியை ரகசியமாக பொறுத்தும்படி மெக்கானிக் லெஜண்ட் சரவணனிடம் காவல்த்துறை ஆய்வாளர் ஆண்டிரியா கேட்கிறார். ஆனால் எனது வாடிக்கையாளருக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன்” என்று லெஜண்ட் சரவணன் மறுத்து விடுகிறார். இவர்களின் சந்திப்பை தெரிந்து கொண்ட வில்லன், கைத்தொலைபெசியில் “ஆய்வாளர் ஆண்ட்ரியா உன்னிடம் என்ன கேட்டாள். நீ என்ன சொன்னாய்? என்று சரவணிடம் கேட்கிறார். அவரோ உங்கள் காரில் ஒலிப்பதிவு மற்றும் தடங்காட்டி பொறியை பொறுத்த சொன்னார். நான் முடியாது என்று மறுத்க்த்குவிட்டேன்” என்று சொல்கிறார். இதைத்க்த்கவிர வேறு என்ன கேட்டாள்? என்று வில்லன் கேட்க, வேறு ஒன்றும் கேட்கவில்லை என்று சரவணன் சொல்லிவிடுகிறார். இதை நம்பாத வில்லன் சரவணனின் பெண் குழந்தையை கடத்தி வெளிநாட்டுக்கு விற்க ஒரு கண்டைனரில் கடத்தி துறைமுகத்துக்கு வந்து விடுகுறார். குழந்தையை மீட்க சரவணன் துறைமுகத்த்குக்கு வருகிறார். குழந்தையை சரவணன் மீட்டாரா? இல்லையா?. அவரது குழந்தை சரவணனை அப்பா என்று கூப்பிடாமல் “அங்கிள்” என்றுதான் கூப்பிடுகிறது. அப்பாவை அங்கிள் என்று ஏன் அந்த குழந்தை கூப்பிடுகிறது. உண்மையில் சரவணன் மெக்கானிக்கரா? இக்லையா? இல்லை என்றால் லெஜண்ட் சரவணன் யார்? என்ற புதிர்தான் இப்படத்தின் கதை. படத்க்த்கின் முதல்பாதி சுறுசுறுப்பாகவும் ஜாலியாகவும் செல்கிறது. இடைவேளைக்குப் பின் சரவணன் யார் என்பதை பல உள்கதைகளை வைத்து இயக்குநர் படத்தின் ஓட்டத்துக்கு வேகத்தடை வைத்துவிட்டார். சரவணன் லெஜண்ட் படத்தில் நடித்ததைவிட, இந்த படத்தில் அவரின் நடிப்பில் சிறிதளவு முன்னேற்றம் காணப்படுகிறத்து. ஆனந்தம், கோபம், வசனம் ஆகிய அனைத்த்கு பாவங்களிலும் ஒரேவிதமான பாவம்தான் முகத்தில் தெரிகிறது. அந்த பாவத்தின் சாயலை கதாபாத்திரத்துக்கேற்ற வகையில் சரவணன் மாற்றிக் கொள்ள வேண்டும். அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கும் இக்கதையின் கருவும் வலுவானதுதான். அதிகளவு உள்கதைகளை திணிக்காமல் படத்தை ஒரே பாதையில் சென்றிருந்தால், ஒரு துப்பறியும் நாவலை படத்தில் பார்த்திருக்கும் அனுபவம் பார்வையாளர்களுக்கு கிடைத்திருக்கும். நீண்ட நாட்களுக்குப்பிறகு ஷாம் இப்படத்தில் காவல்த்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். இல்லை வாழ்திருக்கிறார். அரசியல்வாதிகளின் தலையீட்டுக்கும் நடுவில் நீதியை நிலைநாட்டும் காவல்த்துறை அதிகாரியின் தோரணையை திரையில் காட்டி அசத்தியிருக்கிறார் ஷாம். நீண்ட நாட்களுக்குப்பிறகு சரவணின் மாமியாராகவரும் ஐஸ்வரியாவும் இப்படத்தில் மிளிர்கிறார். சண்டைக் காட்சிகளில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிரூப்பது படத்த்கின் வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. ஜிப்ரானின் பின்னணி இசைதான் படத்துக்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது.
“லீடர்” திரைப்பட விமர்சனம்
