அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் குஷ்பூ சுந்தர் மற்றும் ஏ.சி.எஸ். அருண்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர். காதல், நகைச்சுவை, இசை, உணர்வுகள் மற்றும் மாஸ் கூறுகள் நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இது இருக்கும் என்று படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர். மீசைய முறுக்கு 2 படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, கேதிகா சர்மா, சைத்ரா ஜே ஆச்சார், ரம்யா ரங்கநாதன், நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன் மற்றும் கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் “கோவிந்தம்மா” பாடல் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.******
தொழில்நுட்ப குழுவில் திரையுலகின் முன்னணி திறமையாளர்கள் இடம் பெற்றுள்ளனர். படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்க, பாலாஜி சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார், கூடுதல் ஒளிப்பதிவை மாதேஷ் மாணிக்கம் கவனித்துள்ளார். ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பையும், பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பையும், வி.எஸ்.தினேஷ் குமார் கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளனர். பென்ஸ் மீடியாவின் சிஇஓ ஆர்.மதன் குமார், நிர்வாக தயாரிப்பாளர் ஆனந்திதா சுந்தர் மற்றும் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அஸ்வின் ராம் ஆகியோர் தயாரிப்பு பணிகளை முன்னின்று நடத்தியுள்ளனர். பாபா பாஸ்கர், சந்தோஷ் மற்றும் ரகு தாபா ஆகியோர் நடன கலையையும், ஆக்ஷன் சந்தோஷ் சண்டை காட்சிகளையும் வடிவமைத்துள்ளனர். தொழில்நுட்பக் குழு: தயாரிப்பு: அவ்னி மூவிஸ், பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பாளர்கள்: குஷ்பூ சுந்தர், ஏ.சி.எஸ். அருண்குமார் இசை: ஹிப்ஹாப் தமிழா படத்தொகுப்பு: ஃபென்னி ஆலிவர் ஒளிப்பதிவு: பாலாஜி சுப்ரமணியம் கூடுதல் ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம் பென்ஸ் மீடியா சிஇஓ: ஆர். மதன் குமார் நிர்வாக தயாரிப்பாளர்: ஆனந்திதா சுந்தர் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: அஸ்வின் ராம் ஆடை வடிவமைப்பு: பூர்ணிமா ராமசாமி கலை இயக்கம்: வி. எஸ். தினேஷ் குமார் தயாரிப்பு நிர்வாகி: பி. பாலகோபி நடனம்: பாபா பாஸ்கர், சந்தோஷ், ரகு தாபா சண்டைப் பயிற்சி: ஆக்ஷன் சந்தோஷ் டிஜிட்டல் இன்டர்மீடியட்: நாக் ஸ்டுடியோஸ் கலர்ஃபுல் கலரிஸ்ட்: பிரசாத் சோமசேகர் விஎஃப்எக்ஸ்: 85FX, ஹோகஸ் போகஸ் கூடுதல் வசனங்கள்: கரன் கார்க்கி மற்றும் நித்திஷ் டி டைட்டில் கார்டு அனிமேஷன்: அஸ்வின் குமார் மார்க்கெட்டிங்: பாங்க் டிஜிட்டல் தயாரிப்பு மார்க்கெட்டிங் குழு: பீட்ரூட் விளம்பர வடிவமைப்பு: ராகவார்ட்ஸ் முடி மற்றும் ஒப்பனை வடிவமைப்பு: வேல்முருகன் ஆடை உதவியாளர்: அருண் ஸ்டில்ஸ்: பி. கே. ராஜா ஒலி கலவை: கண்ணன் கணபத் ஒலி வடிவமைப்பு: ஏ. சதீஷ் குமார் தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: ஹரி வெங்கட் சி தயாரிப்பு மேலாளர்: விக்னேஷ் ரத்தினம் மக்கள் தொடர்பாளர்: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ், சதீஷ் (S2 மீடியா) மியூசிக் லேபிள்: சரிகம இந்தியா லிமிடெட்

