“கான் சிட்டி” திரைப்பட விமர்சனம்

ஹாரிஸ் துரைராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் “கான் சிட்டி” இப்படத்க்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகிபாயு, வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். அர்ஜூன் தாஸ் நடுத்தர குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஊரைச்சுற்றி கடன் வாங்கி குடும்பம் நடத்துகிறார். அதனால் கடன்காரர்களின் தொல்லை அதிகரிக்கிறது. அவர்களிடமிருந்து தப்பிக்க,  தான் வேலை பார்க்கும் மின்சார வாரியத்துக்கு மின் கட்டணம் செலுத்துபவர்களின் பணத்துக்கு போலி ரசீது கொடுத்து மின்வாரிய பணத்தை மோசடி செய்கிறார். இதனால் வேலை இழந்து சிறைக்குச் செல்கிறார். இதனால் வடிவுக்கரசி, அன்னா பென், யோகிபாபு, வி.டி.வி.கணேஷ் எல்லோரும் ஒன்று சேர்ந்த்கு அர்ஜூன் தாஸை வெளியே கொண்டு வருகிறார்கள். பிறகு எல்லோரும் ஒன்று சேர்ந்த்கு பல மோசடி நிறுவனங்களை நடத்தி கோடிகோடியாக பணம் சம்பாதிக்கிறார்கள். இறுதியில் முடிவு என்ன ஆனது? என்பதுதான் கதை. வழக்கம்போல் இந்த படத்க்திலும் அஎஜூன் தாஸ் எதிர்மறை கதாநாயகனாகவே நடித்திருக்கிறார். அவரின் ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக செல்கிறது. அன்னாபென், வடிவுக்கரசி,யோகிபாபு,சிறுவன் அகிலன் ஆகியோரை சேர்த்துப் பார்க்கும்போது நல்லதொரு குடும்பம் போல் தெரிகிறது. காட்சிகள் நகர நகர ஒவ்வொருவர் உண்மை முகமும் வெளியாகி திடுக்கிட வைக்கிறது.அதிலும் வடிவுக்கரசியின் வேடமும் நடிப்பும் சிறப்பு. அவர்களும் அந்த அளவு பொருத்தமாக நடித்து காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறார்கள்.

பொன்வண்ணன்,அருள்தாஸ்,தம்பிராமையா,விடிவிகணேஷ்,ராதாரவி,இமான் அண்ணாச்சி, ரமேஷ்திலக்,நந்தகோபால்,மொய்தீன்குமார் என படத்தில் நிறைய நடிகர்கள்.ஒவ்வொருவரையும் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

அரவிந்த் விஸவநாதனின் ஒளிப்பதிவில், காட்சிகளில் தெளிவு திரைக்கதையோட்டத்துக்கேற்ற ஒளியமைப்பு. ஷான்ரோல்டனின் இசையில் பாடல்கள் நன்று.பின்னணி இசையும் தாழ்வில்லை. எழுதி இயக்கியிருக்கும்

ஹரீஷ்துரைராஜ்,அர்ஜூன்தாஸை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் அதேசமயம் அவருடைய பலங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து களமிறங்கியிருக்கிறார்.

அடுத்தவரை எப்படியெல்லாம் ஏமாற்றலாம், அரசாங்க நிறுவனத்தில் எப்படி மோசடி செய்யலாம், தனியாக இல்லாமல் கூட்டுச் சேர்ந்து இயங்கினால் என்னென்ன செய்யலாம்? அதோடு அந்தக் கூட்டணியில் பெண்கள் மற்றும் சிறுவர்களையும் சேர்த்துக் கொண்டால் எந்தெந்த வகையில் பயன்தரும் என்கிற பெரிய பாடத்தையே

திரையில்  நடத்தியிருக்கிறார்.எல்லாவற்றையும் செய்துவிட்டு,அதாவது படம் முழுக்க இரத்தம் தெறிக்கத் தெறிக்க வன்முறைக் காட்சிகளை வைத்துவிட்டு படத்தின் இறுதியில் வன்முறை வேண்டாம் அகிம்சையே சிறந்தது என கருத்துச் சொல்வது போல,இந்தப்படத்தில்,நாம் உண்மையாக உழைத்துச் சேர்க்கும் படம்தான் நல்லது என்கிற கருத்தை உணர வைத்திருக்கும் இயக்குநர் ஹாரி துரைராஜை பாராட்டலாம்.