‘ஸ்லம் டாக்’ திரைப்படத்தில் நடிகை தபுவின் துணுக்கு வெளியீடு

“ஸ்லம் டாக்” படத்தில் சக்தி வாய்ந்த அதிகாரி கௌரி ஹெக்டேவாக நடிக்கும் நடிகை தபு கதாபாத்திரத்தை, சுவராசியமான பிரத்யேக முன்னோட்டத்தின் மூலம் படக்குழு அறிமுகப்படுத்தி இருக்கிறது.  இயக்குநர் பூரி ஜெகன்நாத்தையும்,  விஜய் சேதுபதியையும் முதல் முறையாக ஒன்றிணைத்துள்ள படமான ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் கௌரி ஹெக்டேவாக நடிக்கும் தபுவின் முதல் பதாகை வெளியிட்ட பிறகு, படக் குழுவினர் தற்போது அவரது ஆளுமை மிக்க கதாபாத்திரத்தை மேலும் விவரிக்கும் வகையில்… ஒரு ஆற்றல் பெற்ற பிரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர்.*****

நகரின் சேரி பகுதிகளை பின்னணியாகக் கொண்ட இந்த முன்னோட்டம்.. படத்தின் கடினமான உலகத்தை நிலை நிறுத்த தொடங்கி, பின்னர் தபுவை ஒரு குறிப்பிடத்தக்க விதத்தில் அறிமுகப்படுத்துகிறது. அவர் ஒரு காரில் வந்து சிகரெட்டை பற்ற வைத்து.. உடனடியாக நிலைமையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருகிறார். ஒரு உள்ளூர் ரவுடிக்கு அவர் விடுத்த கடுமையான எச்சரிக்கையும்… அதைத் தொடர்ந்து அவர் கொடுத்த ‘பளார்’ என்ற அறையும்… கௌரி ஹெக்டே அதிகாரத்தைத் தேடுபவர் அல்ல… அதை கோருபவள் என்பதை உடனடியாக பிரதிபலிக்கிறது.