மீண்டும் வரும் திரைப்படம் ‘மூடர் கூடம் 2’

13 ஆண்டுகளுக்கு முன்பு, வித்தியாசமான நகைச்சுவை, வினோதமான கதாபாத்திரங்கள் மற்றும் வித்தியாசமான கதை சொல்லல் ஆகியவற்றின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த ‘மூடர் கூடம்’, தற்போது புதிய பரிமாணத்துடன் மீண்டும் திரும்பி வருகிறது.  முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தின் விரிவான களத்தையும், அதிக சவால்களும் நிறைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு உருவாகும் இந்தப் படம், இத்தாலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, குரோஷியா, ஸ்லோவேனியா மற்றும் கசகஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நவீன் ஹிதயத், ஓவியா, சென்றாயன், ராஜாஜி, குபேரன் மற்றும் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.********

ஒளிப்பதிவை சூரஜ் நல்லுசாமி மேற்கொண்டுள்ளார். அம்ரீஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, நடராஜன் சங்கரன் பின்னணி இசையமைத்துள்ளார். அதியப்பன் சிவா படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில், விஜய் ரத்தினம் MPSE ஒலியமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். கே.ஏ. பாட்சா தலைமையிலான சர்வதேசக் குழு, விஎஃப்எக்ஸ் பணிகளை மேற்கொண்டுள்ளது.

கிராண்டல் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கமல் போஹ்ரா மற்றும் சம்கித் போஹ்ரா தயாரித்துள்ள ‘மூடர் கூடம் 2: மிஷன் பாசிபிள்’, தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான கல்ட் கிளாசிக் படங்களில் ஒன்றை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்ல உள்ளது. ஏற்கனவே முதல் தோற்றம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த சில மாதங்களில் மேலும் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.