2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது சென்னை
மாவட்டம், 13. கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 14 மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) Burnt Memory/Microcontroller-ஐ ஆய்வு செய்து சரிபார்க்க (Checking & Verification – C&V) கோரி, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளரான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் விண்ணப்பம் செய்திருந்தார். அதன்படி, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை, அருணாச்சலம் தெருவில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கைச் சுவடு (VVPAT) கிடங்கில் உள்ள பாதுகாப்பு அறை (Strong Room) 29.07.2026 அன்று விண்ணப்பதாரர் வேட்பாளரின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள், பிற போட்டியிட்ட வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அதே நாளில் BurntMemory/Microcontroller-ஐ ஆய்வு செய்து சரிபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டன. மேற்படி ஆய்வு மற்றும் சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)-லிருந்து ஒரு பொறியாளர் மற்றும் இரண்டு உதவிப் பொறியாளர்களை நியமித்தது. BEL பொறியாளர்கள் விண்ணப்பதாரர் வேட்பாளரின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள், பிற போட்டியிட்ட
வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில், விண்ணப்பதாரரால் தேர்வு செய்யப்பட்ட 14 வாக்குச்சாவடிகளுக்குரிய மின்னணு வாக்குப்பதிவுகளும் சரியாக உள்ளது என புகாதார முக ஸ்டாலினுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது
முக ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு அனைத்தும் சரியாக உள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிக்கை சமர்பித்துள்ளது
