தங்க முகையதீன்
————
ஆர்.மாதவன், சரிதா மாதவன், வர்கீஸ் மூலன் மற்றும் விஜய் மூலன் ஆகியோரின் தயாரிப்பில், கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் மாதவன், சத்யராஜ், ஜெயராமன் பிரியாமணி, துஷாரா விஜயன், தம்பி ராமையா, அதிதி பாலன், பிரிகிடா, ஷீலா ராஜ்குமார் கருணாகரன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஜி.டி.என்”. 1893-ஆம் ஆண்டு மார்ச் 23-இல் கோவை கலங்கல் கிராமத்தில் பிறந்த இவரின் முழுப் பெயர் கோபால்சாமி துரைசாமி நாயுடு. அதன் சுருக்கமே ஜிடிநாயுடு. ஜிடிநாயுடுவாக நடித்திருக்கும் மாதவன் ஒரு வெள்ளைக்கார நண்பரிடம் ரூ.250க்கு ஒரு மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்குகிறார். உடனே அந்த மோட்டார் சைக்கிளை அக்குவேறாக ஆணி வேறாக பிரித்து அதன் தொழில் நுட்பத்தை அறிந்து கொள்கிறார். பிறகு மின்சாரத்தில் இயங்கும் ஒரு மோட்டாரை தயாரிக்கிறார். வீட்டுக்கு வெங்காயம் வெட்டுவத்ற்கு ஒரு கருவியை கண்டுபிடித்து தன் மனைவிக்கு கொடுக்கிறார். மிசாரத்தில் தயிர் கடையும் எந்திரத்தை தயாரித்து தன் மனைவிக்கு கொடுக்கிறார். பிறகு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒரு பேருந்தை செய்து அதை ஓட்டிகாட்டுகிறார். இப்படி ஒரு விவசாய ஏழை குடும்பத்தில் பிறந்த ஜிடிநாய்டு படிப்படியாக புதிய கண்டுபிடிப்புகளை செய்து‘யுனைடெட் மோட்டார் சர்வீஸ்’ என்ற கூட்டுறவு நிறுவனத்தைத் தொடங்கி சாதனை படைக்கிறார். பாசசாலை படிப்பறிவு இல்லாமல் தன் சொந்த அறிவால் விஞ்ஞானி ஆகி பெரும் செல்வந்தராகிறார். ஆனால் இவரின் வருமானத்துக்கு முறையாக வருமான்வரி கட்டாமல் அரசை ஏமாற்றுகிறார். இவரிடம் எப்படியும் வருமானவரியை வசூல் செய்தே ஆகவேண்டும் என்று வருமானவரி அதிகாரி ஜெயராமன், மாதவனுக்கு பல தொல்லைகளை கொடுக்கிறார். அரசாங்கம் இவரின் அலுவலகத்தையும் விட்டையும் பூட்டி ஜப்தி செய்கிறது. வங்கி கணக்குகளை முடக்குகிறது. அத்தனையும் எதிர்கொள்கிறார். ஜெயராமன் கொடுக்கும் பல தொந்தரவுகளில் இருந்து மாதவன் மீண்டாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
இப்படம் முழுக்க முழுக்க ஜிடிநாயுடுவின் வாழ்க்கை வராற்றுப் படம். இந்த ஆவணப்படத்தை வணிக ரீதியான படமாக இயக்கியிருக்கிறார் கிருஷ்ணகுமார். ஈ.வெ.பெரியாரின் உற்ற நண்பரான ஜிடிநாயுடுவின் பகுத்தறிவு விவாதங்களை, மாதவன் தன் விழிகளாலும் புன்சிரிப்பினாலும் உடல்மொழியாலும் பறைசாற்றுகிறார். திரையில் ஜிடிநாயுடுவை மாதவன் உருவில் காணமுடீகிறது. மாதவனின் நண்பராக வரும் சத்திராஜின் தோற்றம் பார்வையாளர்களை 1893 ஆம் ஆண்டிற்கே அழைத்துச் செல்கிறது. அந்தகாலத்து மனிதர்களின் ஆடை அலங்காரம் நம்மை பெய்மறக்கச் செய்கிறது. கலை இயக்குநரும் ஆடை அமைப்பாளரும் பாராட்டுதலுக்கு உரியவர்கள். சத்தியராஜின் அனுபவ நடிப்போடு போட்டிபோட்டு நடித்திருக்கிறார் ஜெயராமன். பிரியாமணி, துஷாரா விஜயன், தம்பி ராமையா, அதிதி பாலன், பிரிகிடா, ஷீலா ராஜ்குமார் என அனைவரும் இப்படத்தைதோள் கொடுத்து சுமந்து வருகிறார்கள்.
உச்சக்கட்ட காட்சியில் ஜெயராமன் வருமானவரி அதிகாரி பணீயிலிருந்து ஓய்வு பெறுகிறார். அப்போது மாதவனைப் பார்த்து “அரசாங்கத்துக்கு கட்ட வேண்டிய வரியை கட்டியிருந்தால் நீர் இவ்வளவு கஷ்ட்டப்பட்டிருக்க வேண்டாமே”. என்று கூறுகிறார். அதற்கு மாதவனின் (ஜிடிநாயுடுவின்) பதிலை கேட்டு ஜெயராமன் மாதவனின் காலில் விழுகிறார். நான் எழுந்து நின்று கைதட்டினேன்.

