கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ஹுமா குரேஷி, ருக்மணி வசந்த் ஆகியோரின் நடிப்பில். வெளிவந்திருக்கும் படம் “டாக்ஸிக்”. 1947-ல் போர்த்துகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவாவில் நயன்தாரா, யாஷின் பெற்றோர்கள் போர்ச்சிகீசிய ரவுடிகளால் கொல்லப்படுகிறார்கள். அனாதைகளாக விடப்பட்ட சிறுவயது யாஷின் “பசிக்கிறது அக்கா” என்று இளம்வயது அக்காவான நயன்தாராவிடம் கேட்கிறார். தம்பியின் பசிதீர்க்க விலைமாதாகிறாள் இளம்வயது நயன்தாரா. பிறகு 1967 ல் நயன்தாராவும் யாஷும் பெரியவர்கள் ஆகிறார்கள். போர்ச்சுகீசிய ரவுடிகளுக்கு எதிராக யாஷும் போதைப்பொருள் கடத்தி விற்று பெரும் செல்வந்தராகிறார். அவருக்கு அக்கா நயன்தாராவும் உடந்தையாக இருக்கிறார். 3 மணி 15 நிமிடங்கள்
படம் ஓடுகிறது. இதில் 3 மணி நேரம் மது குடிப்பது, புகைபிடிப்பது, கண்ணில் கண்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, அவ்வப்போது உடல் உறவு கொள்வது என திரைக்கதை தறிகெட்டு ஓடுகிறது. கடைசியாகயுள்ள 15 நிமிடத்தில் மட்டும் யாஷ் ஏன் இதையெல்லாம் செய்கிறார் என்பதை காண்பிப்பதுதான் கதை. ஒரு படத்தை இயக்கும் இயக்குநரின் மன அழுத்தம்தான் திரைக்கதையாக உருவெடுக்கும். அந்த மன அழுத்தம் சமூதாயத்துக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். நாட்டுமக்களை நல்வழிப்படுத்துவதாக இருக்கவேண்டும். இப்படத்தை இயக்கிய இயக்குநர் கீது மோகன்தாஸ் ஒரு பெண்ணாக இருந்தும் ஏன் இப்படிப்பட்ட ஒரு கதையை சிந்தித்தார் என்பது தெரியவில்லை. தமிழில் ஒரு பழமொழி உண்டு. “உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே” இதற்குமேல் என்ன சொல்ல?. 600 கோடி ரூபாய் செலவில் இப்படத்தை எடுத்த்கிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அரிப்பை சொறிந்து கொண்டார் இயக்குநர். பணத்தை இழந்தார் தயாரிப்பாளர். மதிப்பை இழந்தார்கள் நடிகர்கள். அமுதம் வரும் என்று நினைத்து பால் கடலை கடைந்தபோது வெளிவந்த நஞ்சை ஏந்திய கதாபாத்திரங்கள். ஆனால் படத்தில் நடித்த நடிகர்கள் எல்லோரும் மிகவும் கஷ்டப்பட்டு தனது உழைப்பை, வாங்கிய சம்பளத்துக்கு வஞ்சனை செய்யாமல் நடித்து கொடுத்திருக்கிறார்கள்..
“டாக்ஸிக்”திரைப்பட விமர்சனம்
