நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா, தனது திரைப்பயணத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரங்களில் ஒன்றாக உருவாகி வரும் ‘மைசா’ திரைப்படத்திற்காக தனது உடல் மற்றும் நடிப்பு திறன்களின் எல்லைகளை கடந்து உழைத்து வருகிறார். இப்படத்தில் கோண்ட் பழங்குடியின பெண்ணாக நடிக்கும் ராஷ்மிகா, கதாபாத்திரத்தின் உணர்வையும், தீவிரத்தையும் திரையில் உண்மைத்தன்மையுடன் வெளிப்படுத்துவதற்காக கடுமையாக உழைத்து வருகிறார். ரவீந்திர புல்லே இயக்கத்தில், அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் சார்பில் தயாராகி வரும் இப்படத்தின் மீது ஏற்கனவே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. பதாகையில்
கையில் பிரம்மாண்டமான ஈட்டியுடன் ராஷ்மிகா மந்தனா காட்சியளிக்கிறார். அவரது முகத்தில் போர்க்காயங்களும், பின்னணியில் ஏராளமான மக்கள் கூட்டமும், தீப்பிழம்புகளும் இடம்பெற்றுள்ளன. பாரம்பரிய உடைகள், ஆயுதங்கள், தீக்காட்சிகள் மற்றும் ராஷ்மிகாவின் ஆக்ரோஷமான முகபாவனை ஆகியவை போஸ்டருக்கு வலிமையான வரலாற்றுப் பின்னணி கொண்ட ஆக்ஷன் திரைப்படத்திற்கான தோற்றத்தை அளிக்கின்றன. இப்படத்தில் ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஈஸ்வரி ராவ், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், தாரக் பொன்னப்பா, நிதி சிங் மற்றும் பலர் ந்டித்துள்ளார்கள். ‘மைசா’ திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.********
இயக்கம்: ரவீந்திர புல்லே, தயாரிப்பு நிறுவனம்: அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர்கள்: அஜய் சாய்புரெட்டி, அனில் சய்யாபுரெட்டி, வீரசாய் கோபா
இணை தயாரிப்பாளர்: ஸ்ரீகாந்த் ரெட்டி சாத்தி
இசை: ஜேக்ஸ் பிஜாய் ஒளிப்பதிவு: ஷ்ரேயாஸ் பி. கிருஷ்ணா ஸ்டண்ட்: கேச்சா காம்பாக்டீ
புரொடக்ஷன் டிசைனர்: ஜி.எம். சேகர் ஆடை வடிவமைப்பு: ஆயிஷா மரியம் VFX: நாகு தலாரி & அசோக் மொச்சர்லா பப்ளிசிட்டி டிசைன்: ஏஸ்தெடிக் குஞ்ஜம்மா மார்க்கெட்டிங்: ஹாஸ்டேக் மீடியாமக்கள் தொடர்பு: சதீஷ் குமார், S2 மீடியா
‘மைசா’ – நவம்பர் 27, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்!

