ஹரிபிரியா ரோஷிணி, பால சரவணன், காளி வெங்கட் முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘என் சி 51’ படத்தை ஆர்.பி. பாலா, பி.ஜி. முத்தையா தயாரிக்கின்றனர். இப்படத்தில் நவீன் சந்திரா முதன்மை வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 26 அன்று சென்னையில் நிறைவுற்றது. படம் சிறப்பாக உருவாகியிருப்பதை குழுவினர் அனைவரும் இணைந்து கொண்டாடினர். பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்ய, சக்தி பாலாஜி இசையமைக்க, அஜய் மனோஜ் படத்தொகுப்பை கையாளுகிறார். கலை இயக்கம்: டி. கிராபோர்டு, ஸ்டண்ட்: டேஞ்சர் மணி, பாடல்கள்: மோகன் ராஜா, ஒலிப்பதிவு: ராஜா நல்லையா, மக்கள் தொடர்பு: நிகில் முருகன். அனீஷா ரெஹானா மற்றும் ஹகினோ ஷுன்சுகி கெவின் இந்த திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ஆவார்கள்.*********
ஆர்.பி. பாலா, பி.ஜி. முத்தையா தயாரிப்பில் ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இதர பணிகளையும் முடித்து படத்தை திரையரங்குகளில் விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

