தங்க முகையதீன்
ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா, சேத்தன், பிரித்வி பாண்டியராஜன், காளி வெங்கட் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பராசக்தி”. 1959-1960 ஆம் ஆண்டில் இந்தி திணிப்பு உச்சக்கட்டத்திலிருந்த காலகட்டத்தில், இந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்த சட்டக்கல்லூரி மாணவன் சிவகார்த்திகேயன் புறநானூற்றுப்படை என்ற அமைப்பை உருவாக்கி இந்தி திணிப்புக்கு எதிராக போராடி வருகிறார். அந்த போராட்டத்தின் முதல்கட்டமாக மதுரைக்கு வரும் தொடர்வண்டியை தீ வைத்து கொளுத்த சிவகார்த்திகேயன் சகமாணவப்படைகளுன் வந்து தொடர்வண்டியிலுள்ள பயணிகளை கீழே இறக்கி விடுகிறார். அதே நேரத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக போராடும் மாணவர்களை சிறைபிடிக்க டில்லியிலிருந்து காலால் ராணுவப்படை தளபதி ரவிமோகன் தொடர்வண்டிக்குள் வருகிறார். தொடர் வண்டிக்குள் சிவகார்த்திகேயனுக்கும் ரவி மோகனுக்கும் பலமான சண்டை நடக்கிறது. இந்த சண்டையில் ரவி மோகணின் கைவிரல் துணிக்கப்பட்டு எழும்பு முறிவு காயத்துடன் தப்பிக்கிறார் ரவி மோகன். திட்டமிட்டபடி தொடர்வண்டியை தீக்கிரையாக்குகிறார் சிவகார்த்திகேயன். ஆனால் அந்த தொடர்வண்டியில் வந்த சிவகார்த்திகேயனின் நண்பரும் தீயில் சிக்கி மரணமடைகிறார். இதை அறிந்த சிவ கார்த்திகேயன் இனி போராட்டம் வேண்டாம் என்று கூறி தனது புறநானூற்றுப்படையை கலைத்துவிட்டு, இந்தி படித்து வேலைக்குச் செல்ல முயற்சிக்கிறார். ஆனாலும் மத்திய அரசு அவருக்கு வேலை கொடுக்க மறுக்கிறது. அதே நேரத்தில் சிவகார்த்திகேயனின் தம்பி அதர்வா முரளி அண்ணன் கைவிட்ட இந்தி திணிப்பு போராட்டத்தை தன்கையிலெடுத்து போராடி வருகிறார். போராட்டத்தை கைவிட்ட சிவகார்த்திகேயன் மீண்டும் போராளியானாரா? இல்லையா? போராளி அதர்வா முரளி என்ன ஆனார்? இந்தி படித்த சிவகார்த்திகேயனுக்கு மத்திய அரசு ஏன் வேலை கொடுக்க மறுக்கிறது? தன் கைவிரலை துண்டித்த சிவகார்த்திகேயனை கொன்றே தீருவேன் என்று சபதமெடுத்த ரவி மோகன் தனது சபதத்தை நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதை சொல்லும் ஒரு வரலாறுதான் இப்படத்தின் கதை. போர்களத்தில் சிங்கெமென கர்ஜிக்கும் சிவகார்த்திகேயன், தமிழர்களின் வீரத்திற்கும் தன்மானத்துக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இப்படத்தில் மிளிருகிறார். தமிழ்ப்பற்றுமிகுந்த பார்வையாளர்கள் நரம்புகள் முறுக்கேறி திரையரங்கில் கூச்சலிடும் அளவுக்கு நடித்திருக்கிறார். திரையுலக வானத்தின் விடிவெள்ளியாக சிவகார்த்திகேயன் பிரகாசிக்கிறார். இப்படத்தின் மூலம் தமிழ்ப்பற்று மிகுந்த மாணவர்களின் நெஞ்சத்தில் சிம்மானம் போட்டு அமர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இதுவரை கதாநாயகனாக அறியப்பட்ட ரவி மோகன், இப்படத்தில் ஓரிரு வார்த்தைகள் பேசி ஆர்ப்பாட்டம் இல்லாத ஒரு வில்லத்தனத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார் ரவி மோகன். அதர்வாவின் கதாபாத்திரம் போர்களத்தில் விவேகமற்ற வீரத்தை காட்டியது சற்று பின்னடைவுதான். தமிழில் அறிமுகமாகியிருக்கும் கதாநாயகி ஶ்ரீலீலா படத்தின் முதல்பாதியில் காதலுக்கு மட்டுமே பயன்பட்டிருந்தாலும் உச்சக்கட்ட காட்சியின் திருப்புமுனைக்கு அவரே காரணமாகியிருந்து பார்வையாளர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார். ச்ஆங்கிலேயனிடமிருந்து சுதந்திரத்தைப்பெற்ற இந்தியா, காங்கிரஸ்காரனிடமிருந்து மொழிச் சுதந்திரம் பெற்ற வரலாறை இக்கால்த்து மாணவர்களுக்கு ஒரு பாடமாக அமைத்துக் திரையில் காட்டியிருக்கும் இயகுநர் சுதா கொங்கராவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

