அல்லு அர்ஜுன் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் ஒரு புராணக் கதைக்காக மீண்டும் இணைய இருக்கிறார்கள். இது அவர்கள் இணைந்து பணிபுரிய இருக்கும் நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அல்லு அர்ஜூனுக்காகவே உருவாக்கப்பட்ட கதை இது என்பதால் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மிகுந்த உற்சாகத்தோடு இந்தப் படத்தை எதிர்பார்த்துள்ளனர். திரைத்துறையில் வெளியான தகவல்களின்படி, இந்தப் படம் புராண கதையாக ரூ.1000 கோடி செலவில் உருவாக இருக்கிறது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் இந்திய மற்றும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு இதுவரை பார்த்த புராண படங்களை மறுவரையறை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.*****
பிப்ரவரி 2027ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லு அர்ஜூன் மற்றும் திரிவிக்ரம் கூட்டணி இந்திய சினிமாவில் புதிய மைல்கல்லை எட்டிப் பிடிக்கும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

