அந்தோணி அஜீத் புரடெக்ஷ்ன் சார்பில் அந்தோணி அஜீத் இயக்கத்தில் உதய தீபா, ஆதேஷ் பாலா, ராட்ஷசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், ப்ரேம் ஷேஷாத்ரி, ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சாவீ”. கதாநாயகன் உதய தீபாவுக்கு இரண்டு தாய்மான்கள் இருக்கிறார்கள். தனது தந்தையின் மரணத்துக்கு இந்த தாய் மாமன்கள்தான் காரணம் என்று நினைத்து மிகுந்த கோபத்தில் இருக்கிறார் உதய் தீபா. அதே நேரத்தில் தனது மற்றொரு மாமன் மகளான கவிதாவை காதலிக்கிறார். கதாநாயகன் உதய் கஞ்சா புகைக்கும் பழக்கம் உள்ளவர். ஒருநாள் சாலை விபத்தில் கவிதாவின் அப்பா மரணமடைந்து விடுகிறார். விரோதியாக இருந்தாலும் தாய் மாமன் என்ற உறவுக்காகவும் காதலி கவிதாவின் தந்தை என்றதாலும் தன் அம்மாவுடன் சாவு வீட்டுக்குச் செல்கிறார் உதய். மறுநாள் காலையில் பிணத்தை அடக்கம் செய்ய எடுக்க வேண்டும். ஆனால் இரவு அப்பிணம் காணாமல் போய்விடுகிறது. காவல்த்துறை ஆய்வாளர் ஆதஷ் பாலா பிணம் காணாமல் போனதைப்பற்றி விசாரணை நடத்துகிறார். பிணத்தைக் கடத்தியது யார்? கடத்தப்பட்ட பிணம் மீட்கப்பட்டதா? இல்லையா? பிணத்தைக் கடத்த என்ன காரணம் என்பதுதான் கதை. கதையின் கரு என்னவோ சிறிய தீபொறிதான். அதை ஊதி ஊதி பெரியதாக்குவதுபோல் படத்தை துப்பறியும் கதையாக்கியிருக்கிறார். இயக்குநர் ஆண்டனி. இயக்குநர் என்ன சொல்ல வருகிறார், என்பது ஆரம்பத்தில் புரியாத புதிராக இருந்தாலும், இறுதியில் ஒரு நல்ல மெசஜோடு, பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார் என்பது புரிகிறது. நாயகனாக நடித்திருக்கும் உதய தீப், வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில், கடினமான சூழல்நிலைகளை அசால்டாக கடந்து போகும் பருவத்தை பக்குவமாக கையாண்டு சிரிக்க வைக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஆதேஷ் பாலா, விசாரணை என்ற பெயரில் அடிக்கும் லூட்டிகள் அனைத்தும் பியூட்டியாக இருக்கிறது. யாசர், மாஸ்டர் விஜய், கவிதா சுரேஷ், பிரேம் கே.சேஷாத்ரி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு. இசையமைப்பாளர்கள் சரண் ராகவன் மற்றும் விஜே ரகுராம் இருவரது பின்னணி இசையும் அளவு. ஒளிப்பதிவாளர் பூபதி வெங்கடாச்சலம் குறைவான விளக்குகளை பயன்படுத்தி காட்சிகளை படமாக்கியிருந்தாலும், காட்சிகளை எளிமையாகவும், இயல்பாகவும் படமாக்கி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். படத்தொகுப்பாளர்கள் சுந்தர்.எஸ் மற்றும் ராகேஷ் லெனின் இருவரது பணியிலும் குறையில்லை. எழுதி இயக்கியிருக்கும் ஆண்டனி அஜித், ஒரு சிறிய சம்பவத்தை வைத்துக் கொண்டு சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் திரைக்கதையை பிளாக் காமெடியாக கொடுத்திருக்கிறார். காணாமல் போன பிணம் கிடைத்ததா ? இல்லையா ? என்ற ஒரு வரியை வைத்துக் கொண்டு இயக்குநர் ஆண்டனி அஜித், பார்வையாளர்களை சிரிக்க வைப்பதோடு, தற்போது சமூகத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ள போதை கலாச்சாரம் மற்றும் அதன் ஆபத்து பற்றி திரை மொழியில் சொல்லி இளைஞர்களை சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.
“சாவீ” திரைப்படம் விமர்சனம்
