நடிகர் அதர்வா முரளி பல்வேறு வெற்றிப்படங்களில் தனது நடிப்பு திறனை நிரூபித்துள்ளார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். இப்படம் குறித்து அவர் பேசியதாவது: ‘பராசக்தி’ கதையையும் அதில் என்னுடைய கதாபாத்திரம் குறித்தும் என்னிடம் முதலில் சொன்னவர் ஆகாஷ்தான். ‘பராசக்தி’ படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து இத்தகைய வலுவான கதாபாத்திரம் கொடுத்ததற்கு நன்றி. ஸ்ரீலீலாவும் உற்சாகமான நடிப்பை கொடுத்துள்ளார். ஸ்ரீலீலாவின் திறமையான நடிப்பும் நடனமும் இந்தப் படம் வெளியான பிறகு இந்திய சினிமாத்துறையில் நிச்சயம் பேசுபொருளாகும்” ‘பராசக்தி’ திரைப்படம் அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும் படமாக இருக்கும்” என்றார். *******
மேலும் பேசுகையில், “ரவி மோகன் என்னுடைய நீண்ட நாள் இன்ஸ்பிரேஷன். ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ படத்தில் அவரது நடனத்தை என் குடும்பத்தினருடன் பார்த்தது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. மழையில் அவர் தனியாக நடனமாடும் ஒரு குறிப்பிட்ட காட்சியை மிகவும் ரசித்து பார்த்தோம். ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கும்போது தன்னை சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார் என என் அம்மா அடிக்கடி சொல்வார். ரவியின் நடிப்பும் நடனமும் எனக்கு அதைத்தான் நினைவூட்டியது. நானும் அதை பின்பற்ற வேண்டும் என முடிவு செய்தேன்” என்றார்.
”சுதா மேடத்தை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். பல கல்ட் மாஸ்டர் பீஸ் படங்களை உருவாக்கிய சுதா கொங்கரா தன்னை மேடம் என அழைக்க வேண்டாம் என்றுதான் முதலில் சொன்னார். அவரது பெருந்தன்மை என்னை வியக்க வைத்தது”. ”வெள்ளித்திரையிலும் நிஜத்திலும் இப்போது சிவகார்த்திகேயன் என் சகோதரர். சினிமாவில் அவரது வளர்ச்சியை நான் எப்போதும் வியந்து பார்த்திருக்கிறேன். சினிமாவில் அவர் தனது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறார். அவரின் வெற்றிகளைப் பார்த்து பல தருணங்களில் மகிழ்ந்திருக்கிறேன். நமது மாநிலத்தை வடிவமைத்த மாணவர் இயக்கத்தை பிரதிபலிக்கும் வரலாற்றின் ஒரு பகுதியாக டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள ‘பராசக்தி’ படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘பராசக்தி’ திரைப்படம் ஜனவரி 10, 2026 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும்.

