பி.டி.ஜி. நிறுவனத்தின் படைப்பாக, அருண் விஜய் நடிப்பில் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ரெட்ட தல”. வரும் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, படக்குழுவினருடன் திரைபிரபலங்கள் கலந்துகொள்ள நடைபெற்றது. இந்நிகழ்வினில் நடிகர் அருண் விஜய் பேசியதாவது: “இந்தப் படத்தின் கதை என்னை வெகுவாக கவர்ந்தது. மேலும் எனக்கு சவாலாக இருந்தது. அப்போதே நான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். இந்தப் படத்தின் முக்கிய தூணாக இருந்தது எடிட்டர் ஆண்டனி சார். படம் படு வேகமாக இருந்தது, அதை சரியாக கட் செய்து கொடுத்துள்ளார். படத்தில் பாடல்களும் காட்சிகளும் உயர்ந்த தரத்தில் இருக்கும். நடிகை சித்தி இத்னானி தனது முழு உழைப்பைக் கொடுத்துள்ளார். தமிழ் சினிமா இதற்கு பின் அவருக்கு பெரிய வரவேற்பு கொடுக்குமென நம்புகிறேன். இந்தப் படத்தில் அதிக ஆக்சன் காட்சிகள் இருக்கிறது. அது நன்றாகவே வந்துள்ளது. கண்டிப்பாக கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும். தனுஷ் சார் ஒரு பாடலைப் பாடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இப்படத்திற்காக அனைவரும் பெரும் உழைப்பு கொடுத்துள்ளோம், *****
நடிகை சித்தி இத்னானி பேசியதாவது, “என்னுடைய முதல் படத்திற்கு பிறகு நான் கொஞ்சம் ரிலாக்ஸாக மாறி விட்டேன் என்று நினைக்கிறேன். அந்த எண்ணத்தை இந்தப் படம் ஆரம்பிப்பதற்கு முன்னர் விட்டு விட்டேன். இனிமேல் தேடலுடன் பணியாற்ற போகிறேன். இந்த படத்தில் எனக்கு மிகவும் முக்கிய கதாபாத்திரம். அதுவே என்னை இங்கு நிறுத்தியுள்ளது. கண்டிப்பாக அது உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குநர் திரு சாருக்கு நன்றி. அருண் விஜய் சாருக்கும் நன்றி. அவருடன் பணி புரிந்தது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் பணி புரிந்த அனைவரும் மகிழ்ச்சியுடன் பணி புரிந்தோம். நானும் தமிழ் கற்றுக் கொண்டே இருக்கிறேன். இன்னும் சில நாட்களில் முழுவதுமாக கற்றுக் கொள்வேன் என்று நம்புகிறேன். இந்த படம் அனைவருக்கும் ஒரு நல்ல என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும் என்று நம்புகிறேன் நன்றி.
இயக்குநர் கிரிஷ் திருகுமரன் பேசியதாவது, “விழாவிற்கு வந்த இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி, இந்தப்படத்தில் என்னுடன் பணி புரிந்த உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் பாபி சாருக்கும், அருண் விஜய் சாருக்கும் நன்றி. படத்தை அனைவரும் தியேட்டரில் சென்று பார்க்கவும் இந்தப் படம் ஒரு நல்ல திரை அனுபவத்தை அனைவருக்கும் கொடுக்கும் நன்றி.

