டவுண் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் “பராசக்தி”. 1960 களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை வெளியிடுகிறது.*********
இப்படம் முறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது: பராசக்தி என்ற பெயரே மிகுந்த வலிமை கொண்டது. அந்த பெயருக்கு ஏற்றபடி, இந்த படமும் அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தும். 1960-களுக்குள் டைம் டிராவல் செய்து பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் படம் இது. மாணவர்கள் எப்போதுமே சக்திவாய்ந்தவர்கள் அவர்கள் எந்த அளவுக்கு வலிமை கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதை இந்த படம் அழுத்தமாக காட்டுகிறது. படத்தின் உள்ளடக்கம் குறித்து பல கருத்துகள் வெளிவருகின்றன. ஆனால் பலரின் தியாகங்களை நாம் நேர்மறையாகவும் மரியாதையுடனும் பதிவு செய்திருக்கிறோம். கொட்டுகாளி படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சிக்கு சுதா மேம் வந்திருந்தார். அப்போது அவர் எனக்கு ஒரு கதையைச் சொன்னார். அது ஒரு காதல் கதை. நான் ஏதோ பெரிய விஷயம் எதிர்பார்த்திருந்தேன். அச்சமயம் அவர் சொன்ன ஒரே ஒரு வரி தான் என்னை ஆச்சரியப்பட வைத்தது. அதற்கு மேல் சொல்ல மாட்டேன். பின்னர் அவர் ஸ்கிரிப்ட் புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொன்னார். உடனே என் மேனேஜரிடம், இந்த படத்தை நான் கண்டிப்பா பண்ணுறேன் இன்று இரவே ஸ்கிரிப்ட்டை படிச்சு முடிச்சுடுவேன்னு சொன்னேன். ஸ்கிரிப்ட் திறந்ததும் அது ஆங்கிலத்தில் இருப்பதை பார்த்து, மீண்டும் கால் செய்து இதுக்கு கொஞ்சம் நேரம் தேவைப்படும்னு சொல்ல வேண்டியதாகிவிட்டது. அடுத்த நாள், ஸ்கிரிப்ட்டை முழுசா படிச்ச மாதிரி நடிச்சுட்டு போயிருந்தேன்.
சுதா மேம் ரொம்ப ஸ்ட்ரிக்ட் அப்படின்னு எல்லாரும் எனக்கு நிறைய பில்ட் அப் கொடுத்திருந்தாங்க. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போன பிறகுதான் தெரிஞ்சது, அவர் சீன்களையே ஆங்கிலத்தில் தான் விளக்குவார். அதுவும் ஷேக்ஸ்பியர் ஆங்கிலம் மாதிரி! அதை நான் சரியாக ஃபாலோ பண்ண முடியல. ஒரு கட்டத்தில் அவர் என்னிடம் வந்து பேசினார். அப்போது தான், எனக்கு ஆங்கிலம் தான் பிரச்சனை, இப்போ நான் கௌதம் மேனன் சார் கூட வாழ்ற மாதிரி உணர்றேன்னு சொன்னேன். அதை கேட்டதும், அந்த நாளிலிருந்து அவர் சீன்களை முழுக்க முழுக்க தமிழிலேயே விளக்க ஆரம்பிச்சார். அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். அதில் மிக முக்கியமானது கடுமையான உழைப்பு மற்றும் முழுமையான அர்ப்பணிப்பு. ரவி சார் உங்களை பார்த்ததும் என் கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்துச்சு. நான் கல்லூரியில் படிக்கும்போது உங்கள் படங்களை தொடர்ந்து பார்த்தவன். குறிப்பாக எம். குமரன் S/O மகாலட்சுமி படத்தில் உங்கள் உடை, ஸ்டைல் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒருநாள் சுதா மேம் வந்து, இந்த படத்தில் நடிக்க ரவி சார் ஓகே சொல்லிட்டாங்க ன்னு சொன்னாங்க. உடனே நான் தலைவர் மோடுக்கு போயிட்டு, எது ஜெயம் ரவி ஆ? ன்னு ரியாக்ட் பண்ணிட்டேன். சந்தோஷப்பட வேண்டிய விஷயம் தான், ஆனாலும் அதே நேரத்தில் ஒரு பெரிய ஆச்சரியமும் இருந்துச்சு. தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சுவாமி எவ்வளவு சக்திவாய்ந்த வில்லனாக இருந்தாரோ, அதே மாதிரி பராசக்தியில் ரவி சார் ஒரு மிகப் பவர்ஃபுல் வில்லன் கதாபாத்திரத்தில் வருகிறார். திரையில் உங்களோடு நெருக்கமாக நடிக்கக் கிடைத்த ஒவ்வொரு நாளையும் நான் மனதார ரசித்தேன். ஜனவரி ஒன்பதாம் தேதி நடைபெறும் ஜனநாயகனை தியேட்டருக்கு செலிப்ரேட் பண்ணுங்கள். 33 வருடம் திரைத்துறையில் என்டர்டைன் பண்ணவர். கடைசி படம் என்று சொல்லி இருக்கிறார் ஆகவே ஜனவரி ஒன்பதாம் தேதி அதனை நாம் கொண்டாட வேண்டும். அடுத்த நாள் ஜனவரி 10ஆம் தேதி நம்ம படத்திற்கு வாங்க பராசக்தியை கொண்டாடுங்கள். இந்த பொங்கல் கோலிவுட்டுக்கு அமேசிங்கான பொங்கல். அனைவருக்கும் தெரியும் அவரவர்கள் படத்தை அவரவர் சூப்பராக கொண்டாடுவார்கள். இன்னும் தெளிவாக சொல்கிறேன் யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் என்னைப் பொறுத்தவரை இந்த பொங்கல் அண்ணன் தம்பி பொங்கல்.

