“அதர்ஸ்” திரைப்பட விமர்சனம்

கிரண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் அபின் ஹரிஹரன் இயக்கத்தில் ஆதித்யா மதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன், நண்டு ஜெகன், முண்டாசுப்பட்டி ராமதாஸ், ஆர்.சுந்தரராஜன், மாலா பார்வதி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும்  படம் “அதர்ஸ்”.  ஒரு நள்ளிரவு நேரத்தில் ஒரு வேன் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிகிறது. அந்த வேனிலிருந்த அனைவரும் தீயில் கருகி மரணமடைகிறார்கள். இந்த விபத்தை காவல்த்துறை அதிகாரியான ஆதியா மாதவன் விசாரணை செய்யும்போது இந்த விபத்தை உண்டாக்கிய மர்ம மனிதனும் கொலை செய்யப்பட்டிருக்கிறான் என்பதை கண்டுபிடிக்கிறார்.  இதுவொருபக்கமிருக்க மறுபக்கத்தில் மருத்துவ மாணவன் ஒருவன் விபரீதமான ஒரு ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். அம்மாணவன் யார்? அந்த விபரீத ஆராய்ச்சி என்ன? என்பதை வேன் விபத்தோடு இணைப்பதுதான் இப்படத்தின் கதை. ஆதித்யா மாதவன் காவல்த்துறை அதிகாரிக்குறிய இலக்கணத்தோடு தனது நடிப்பை வெளிப்படுத்திருப்பது பாராட்டுதலுக்குறியது.  மிடுக்காகவும் அழகாகவ்ம் இருக்கிறார். திரைவானில் இனி வலம் வருவார் என்பதை எதிர்பார்க்கலாம். ஆதித்யா மாதவன் துப்பறிதழுக்கு தூணாக தாங்கி நிற்கிறார் கௌரி கிஷன், கதாநாயகிக்குறிய அத்தனை அம்சங்களையும் தனது உடல் மொழியால் வெளிபடுத்தி ரசிகர்களை கவ்ர்கிறார். திரைவானில் ஒளிவீசும் நட்சத்திரமாக மின்னுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மற்றொரு காவல்த்துறை அதிகாரியாக வரும் அஞ்சு குரியனின் எடுப்பும் துடிப்பும் படத்துக்கு பலம் சேர்க்கிறது. முதல்த்தர நாயகியாக அவரின் வருங்காலம் அமையட்டும். ஆர்.சுந்தர்ராஜன், முண்டாசுப்பட்டி ராமதாஸ் ஆகியோரின் அனுபவ நடிப்பு திரையில் தெரிகிறது. பசத்தூகு மிகப் பெரிய பலம் திரைக்கதையும் ஜிப்ரானின் இசையும்தான். உச்சக்கட்ட  காட்சியில் மனிதவர்க்கத்தின் நியாயத்தை எடுத்துச்சொன்னவிதம் அருமை. இயக்குநர் அபின் ஹர்ஹரனின் சமுதாயச் சிந்தனை வெகுவான பாராட்டுதலுக்குறியது. மூன்றாம் இனத்தவர்களும் நம்மில் ஒருவர்தான்.