‘யூஃபோரியா’ திரைப்படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு

குணா ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி வழங்கும் இயக்குநர் குணசேகரின் ‘யூஃபோரியா’ திரைப்படம் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை  நீலிமா குணா – யுக்தா குணா ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் பூமிகா சாவ்லா, கௌதம் வாசுதேவ் மேனன், சாரா அர்ஜுன், நாசர், ரோஹித், விக்னேஷ் கவி ரெட்டி, லிகிதா யலமஞ்சலி, அடாலா பிருத்வி ராஜ்,கல்ப லதா, சாய் ஸ்ரீனிகா ரெட்டி, அஷ்ரிதா வேமுகந்தி, மேத்யூ வர்கீஸ், ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, ரவி பிரகாஷ், நவீனா ரெட்டி, லிகித் நாயுடு மற்றும் பலர் நடித்துள்ளார்கள்*******

நவீன சமூகச் சிந்தனைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘யூஃபோரியா’, சமூகத்தில் இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் உண்மைச் சவால்களை உணர்வுப்பூர்வமாக பிரதிபலிக்கும் கதையுடன், இளைஞர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களை ஒருசேர கவரும் வகையில் தனித்துவமான கருத்தில் உருவாகியுள்ளது. மேலும், இன்றைய இளைஞர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கிடையேயான உறவுகள், புரிதல்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை நெஞ்சைத் தொடும் விதத்தில் ஆராய்ந்து பேசும் திரைப்படமாகவும் ‘யூஃபோரியா’ அமைந்துள்ளது. ‘துரந்தர்’ மெகா பிளாக் பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, சாரா அர்ஜுன் நடித்துள்ள அடுத்த முக்கியமான திரைப்படமாக ‘யூஃபோரியா’ உருவாகியுள்ளது.

தொழில்நுட்பக் குழு : கதை, திரைக்கதை, இயக்கம் : குணசேகர் வழங்குபவர் : ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் – திரு. முரளி ராமசாமி தயாரிப்பாளர்கள் : நீலிமா குணா – யுக்தா குணா இசை : கால பைரவா ஒளிப்பதிவு : பிரவீன் கே. போத்தன் எடிட்டர் : பிரவீன் புடி வசனங்கள் : நாகேந்திர காசி – கிருஷ்ண ஹரி மக்கள் தொடர்பு : விஜய முரளி,  கிளாமர் சத்யா, சதீஷ் குமார் (S2 மீடியா), மார்க்கெட்டிங் & புரமோஷன்ஸ் (தமிழ்) : N. S. ஜெகதீசன் (Digitally)