“இருமுடி கட்டு” திரைப்பட விமர்சனம்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் ஏர்னேனி மற்றும் ரவிசங்கர் தயாரிபில் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா, பிரியா பவானி சங்கர், சாய் குமார், குழந்தை நக்ஷத்ரா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “இருமுடி கட்டு”. ரவி தேஜா ஒரு சாதாரணமான நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர். மதுப்பழக்கம் உள்ளவர். ஐய்யப்ப பக்தர். எல்லாவற்றுக்கும் மேலாக பெண்களுக்கு எதிராக செயல்படுவதை தட்டிக்கேட்பவர். இவருடைய மனைவி பிரியா பவானி சங்கர். இவரின் குழந்தை ரஷிதாவை தன் உயிருக்கும் மேலாக நேசிப்பவர். தன் மகள் ரஷிதாவிடம் “நீ பாடசாலைக்கு சென்று திரும்பி வரும்வரை நீ பார்க்கின்றவற்றை அத்தனையும் என்னிடம் சொல்ல வேண்டும்” என்று சொல்லி அனுப்புகிறார். குழந்தை ரஷிதாவும் தான் பார்த்தவறறை ஒன்றுகூட விடாமல் தந்தை ரவி தேஜாவிடம் சொல்லுகிறார். அதை கேட்டுவிட்டு ரவி தேஜா என்னென்ன செய்கிறார் என்பதுதான் கதை. மகள் தூங்கிக் கொண்டு இருக்கிறாள் ஊருக்குள் யாரும் ஹாரன் அடிக்கக் கூடாது ‘என்று ரவிதேஜா கட்டளை போடும் காடசியின் வீரியம் பின்னால் விளங்கும் இடத்தில் அட்டகாசமாக ஜெயிக்கிறார் ஷிவா நிர்வாணா.  அதே போல படத்தின் முக்கால்வாசி என்ன நடக்கிறது என்று எளிமையாக எல்லோருக்கும் புரியும்படி இருக்க, அந்த அலட்சியத்தில். பார்வையாளர்களை மூழ்க விட்டு, உச்சக்கட்ட காட்சியில் அடுத்து அடுத்து இரண்டு அதிரடி  திருப்பங்கள்  கொடுக்கிறார். இது படம் பார்க்கும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து கைத்தட்ட வைக்கிறார் ரவி தேஜா.  மனைவியாக பிரியா பவானி சங்கர் மிகவும் கதாபாத்திரத்தின் உண்மைத்தன்மைக்கு அழகாக தன் நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். குருசாமி கதாபாத்திரத்துக்கு கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார் சாய் குமார். இவர்கள் அனைவரையும் ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு மொத்த படத்தையும்  இருமுடி கட்டாக தூக்கி தன் தலையில் சுமக்கிறார் குழந்தை நஷிதா. ஜி வி பிரகாஷ்குமாரின்  பாடல்களும் பின்னணி இசையும் கதையின் கையைபிடித்து வெற்றி நடை போடவைக்கிறது. விஷ்ணு ஷர்மாவின் ஒளிப்பதிவு  அட்டகாசமான இயற்கை காட்சிகளை நம் கண்ணுக்கு விருந்து படைத்திருக்கிறார். படத்தொகுப்பை பக்காவாக கையாண்டிருக்கிறார் பிரவீன் புடி. படத்தின் உச்சக்கட்ட காட்சியில் அனைவரையும் கண்கலங்க செய்துவிட்டார் இயக்குநர் ஷிவா நிர்வாணா. மனைவி மக்களோடு சென்றுபார்க்க வேண்டிய படம் “இருமுடி கட்டு”. உண்மைக்கு நெருக்கமான படம்.