நயன்தாரா, கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தின் கதைக்களம், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான பயணத்தை முன்வைக்கிறது. திருமணம் ஆகாமல் தவிக்கும் இளைஞராக கவின், களேபரங்களுக்கு மத்தியில் நயன்தாராவை கரம் பிடித்து, அவரைக் காதலிக்க வைக்கப் போராடும் காட்சிகள் காணொளியில் கவனம் ஈர்க்கின்றன. இவர்களுக்கிடையேயான காதல் காட்சிகளுடன் நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருப்பங்கள் என டிரெய்லர் முழுக்க சுவாரஸ்யமான அம்சங்கள் நிறைந்துள்ளன.*******
மேலும், மறைந்த இயக்குநர் நடிகர் கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட அனுபவம் மிக்க திரை ஆளுமைகளின் அட்டகாசமான நடிப்பும் டிரெய்லரில் கவனம் பெறுகிறது. அதேபோல், கவின் – நயன்தாரா ஜோடியின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

