தாம்பரம் மாநகரில் ரவுடிகள், போதைப் பொருள் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை – 57 பேர் கைது;

தாம்பரம் மாநகர காவல் ஆணையர் திரு. நஜ்முல் ஹோடா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், போதைப் பொருள் குற்றவாளிகள் மற்றும் இதர சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோரின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் நோக்கில், 26.11.2026 மற்றும் 27.11.2026 ஆகிய இரண்டு நாட்கள், தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சிறப்பு சோதனையானது, தாம்பரம் மற்றும் பள்ளிக்கரணை மாவட்ட காவல் துணை ஆணையாளர்கள் தலைமையில், 192 சிறப்புக் காவல் குழுக்களைச் சேர்ந்த 547 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் பங்கேற்று, 486 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் 117 தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் என மொத்தம் 603 பேர் சோதனை செய்யப்பட்டனர்.

மேலும், இந்நடவடிக்கையின்போது, 16 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், 41 தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் என மொத்தம் 57 பேர் கைது செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும், இந்நடவடிக்கையின்போது, 6.450 கிலோ கஞ்சா மற்றும் 270 Tapentadol போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற சிறப்பு அதிரடி சோதனைகள் மூலம் குற்றச் செயல்களைத் தடுத்து, குற்றவாளிகளைக் கண்காணித்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் தாம்பரம் மாநகர காவல்துறை உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.