கமல்ஹாசனுக்கு தெலங்கானா அரசின் “கட்டார்”. திரைப்பட விருது நிகழ்வில் “பைடி ஜெய்ராஜ் விருது” வழங்கி கௌரவிக்கப்படுகிறது. பல்வேறு இந்தியத் திரைப்படத் துறைகளில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடிக்கும் அவரது குறிப்பிடத்தக்கப் பயணத்தை அங்கீகரிக்கும் வகையில் இது அமைகிறது. திரைப்பட முன்னோடியான ‘பைடி ஜெய்ராஜின்’ பெயரால் வழங்கப்படும் இந்த விருது, ‘சாகர சங்கமம்’ மற்றும் ‘சுவாதி முத்யம்’ போன்ற படங்கள் மூலம் தெலுங்குத் திரையுலகிற்கு, அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்க மற்றும் நீடித்த பங்களிப்புகளைப் பாராட்டுகிறது. *******
“pan-India cinema” பரவலாகக் கொண்டாடப்படும் இக்காலத்தில், 80 மற்றும் 90களில் மொழிகடந்து கமல்ஹாசன் ஆற்றிய ஆரம்பகாலப் படைப்புகள் அந்த இயக்கத்திற்கு ஒரு உண்மையான அடித்தளமாகத் திகழ்கின்றன. கதைசொல்லல், கதாபாத்திர உருவாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தில் செய்யப்பட்ட பரிசோதனைகள், பிரதான இந்திய சினிமாவின் ஒரு அடையாளமாக மாறியதுடன், புதுமையால் வரையறுக்கப்பட்ட ஒரு பாரம்பரியத்தையும் இந்தக் கௌரவம் கொண்டாடுகிறது.

