துல்கர் சல்மான், சமுத்திரக்கனி பாக்கியஸ்ரீ போர்ஸ் மற்றும் பலர் நடித்திருக்கும் “காந்தா” பீரியட் டிராமா த்ரில்லர் கதையான ‘காந்தா’வின் தன்மைக்கும் பிரதிபலிக்கும் ஆன்தமாக, வெளியாகும் பாடல் இருக்கும். செல்வமணி செல்வராஜ் இயக்கிய ‘காந்தா’ திரைப்படம் இந்த வருடம் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியோர் ‘காந்தா’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர்.*******
ஜானு சந்தாரின் இசை இருமொழிகளுக்கானது மட்டுமல்ல, இருமொழி ரசிகர்களின் மனங்களையும் உள்ளடக்கியது. ஒன்று உணர்வையும் மற்றொன்று தடைகளுக்கு எதிரான கோபம் மற்றும் தன்னம்பிக்கையின் நெருப்பாக இருக்கும். அதிரும் இசை, பவர்ஃபுல் கிட்டார்ஸ் மற்றும் புதிய வடிவத்தில் பழங்கால இசை என இந்தப் புதுமையை பாடலில் மட்டுமல்லாது படத்திலும் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

