பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு உருவாகியுள்ள ‘பட்டர்ஃபிளை’ பாடல் தொகுப்பு

சமீப நாட்களில் திரைப்பட பாடல்களுக்கு இணையாக காணொளித் தொகுப்பு  பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு ‘பட்டர்ஃபிளை’ தொகுப்பு பாடல் உருவாகி உள்ளது. தொகுப்பு  பாடல் என்றாலே ஆட்டம் போட வைக்கும் துள்ளல் பாடல்களாகவும் தான் வெளிவரும். ஆனால் ‘பட்டர்ஃபிளை’ தொகுப்பு  பாடல் இதிலிருந்து தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் நினைத்தால், அவள் மனதால் விருப்பப்பட்டால் அதை அவளுக்கும், அவளை சார்ந்தவர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான வாழ்வாக மாற்றி அமைக்க முடியும்  என்ற கருத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது இந்த ‘பட்டர்ஃபிளை’ தொகுப்பு .. ஒட்டுமொத்த பெண்களின் இரண்டு விதமான வாழ்க்கை முறையை இதில் அழகாக காட்சிப்படுத்தியுள்ளனர். காந்தாரா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த தொகுப்பு  பாடலில் சாந்தினி மற்றும் ஷ்ரதா ராவ்,  விஷ்ணு ஆகியோர்  நடித்துள்ளனர். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் திரைப்பட தயாரிப்பாளர் மதியழகன் நடித்துள்ளார். அவருக்கு நடிகர் பார்த்திபன் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.  பாடலை கவிஞர் மணி எழுத அச்சுராஜா மணி இசையமைத்துள்ளார். அச்சுராஜா மணி மற்றும் அமலா இணைந்து ஒந்த பாடலை பாடியுள்ளனர்.  அழகாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் பிராங்கிளின் ரிச்சர்ட்.  கதாசிரியர் வி. கார்த்திக் குமார் இந்த பாடலை  இயக்கியுள்ளார்.******

எந்த சூழ்நிலையாக இருந்தாலும் தங்களை அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு அழகாக மாற்றும் சக்தி பெண்ணுக்கும் பட்டாம்பூச்சிக்கும் உண்டு என்பதை மையப்படுத்தி தான் இந்த ஆல்பத்திற்கு ‘பட்டர்ஃபிளை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  (ஆக=26) பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு இந்த பட்டர்ஃபிளை ஆல்பம் ETCETERA ENTERTAINMENT  YOUTUBE சேனலில் வெளியிடப்படுகிறது. *மக்கள் தொடர்பு ; A.ஜான்*