கோதண்டம் கோ மற்றும் லட்சு கணேஷ் தயாரிப்பில், குரு ஏ. எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “பருத்தி” டிசம்பர் 25 திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் காணளி காட்சி வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவினில் நடிகை சோனியா அகர்வால் பேசியதாவது.., பருத்தி எனக்கு மிக வித்தியாசமான அனுபவம். டார்க் மேக்கப் போட்டு நடித்திருக்கிறேன். நான் இயக்குநரிடம் இங்கு இருந்து யாரையாவது நடிக்க வைக்கலாமே எனக் கேட்டேன் ஆனால் உங்களுடைய அனுபவமும் நடிப்பும் இந்தப் படத்திற்கு வேண்டும் என்றார். அவர் வைத்த நம்பிக்கையை நிறைவேற்றியுள்ளேன் என நம்புகிறேன். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும்.என்றார். தயாரிப்பாளர் நடிகர் கோதண்டம் பேசியதாவது: பருத்தி நல்ல படம். இப்படத்தை முழுக்க கஷ்டபட்டு எடுத்துள்ளோம் அனைவரும் ஆதரவு தாருங்கள்.என்றார். தயாரிப்பாளர் லட்சு கணேஷ் பேசியதாவது: பருத்தி படத்தை படக்குழு மிகச்சிறப்பாக எடுத்துள்ளனர். படத்தில் நடித்த சோனியா அகர்வால் முதலாக அனைவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். என்றார். இயக்குநர் குரு ஏ. பேசியதாவது: என் முதலாளி கோதண்டம், லட்சு கணேஷ் இருவரும் கதை சொன்ன உடனே, எப்போது ஷீட்டிங் போகலாம் என்று கேட்டனர். எனக்கு முழு ஆதரவு தந்து இப்படத்தை எடுத்ததற்கு இருவருக்கும் நன்றி. இப்படத்தில் நடித்த குழந்தை தயாரிப்பாளரின் குழந்தை. அவர்கள் இருவருக்கும் உள்ள நட்பை இப்படத்தில் பேசியுள்ளேன். சின்ன வயதில் குழந்தைகள் மனதில் சாதி எனும் விதையை விதைக்கக் கூடாது என பேசியுள்ளோம்.*******
“பருத்தி” திரைப்படம் டிச.25ல் வெளியீடு
