பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் திரைப்படம் ‘லட்சுமிகாந்தன் கொலை வாழக்கு’ . படத்தின் முதல் பதாகையை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார். ‘லட்சுமிகாந்தன் கொலை வாழக்கு’ திரைப்படத்தை தயாள் பத்மநாபன் இயக்கியுள்ளார். இப்படத்தை 2 எம் சினிமாஸ் சார்பில் கே.வி.சபரீஷ் தயாரிக்க, டி பிக்சர்ஸ் சார்பில் தயாள் பத்மநாபன் இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிசி ஆண்டனி, சரவணன், லொள்ளு சபா மாறன், லோகா கண்ணன், நர்மதா, கவிதா பாரதி, கனியா பாரதி, அருவி மதன், சுபா. வீரபாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரியாரியவாதி சுப. வீரபாண்டியன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது, கதைக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது. ******
தொழில்நுட்பக் குழு: கதை & இயக்கம் : தயாள் பத்மநாபன் திரைக்கதை & வசனம் : கவிதா பாரதி, தயாள் பத்மநாபன் ஒளிப்பதிவு : எம்.வி. பனீர்செல்வம் தொகுப்பு : வி. பூபதி இசை & பின்னணி இசை : தர்புகா சிவா கலை இயக்கம் : அன்பு மேக்கப் : குப்புசாமி உடை வடிவமைப்பு : ரமேஷ் தயாரிப்பு நிர்வாகம் : மாரியப்பன், குட்டிகிருஷ்ணன் மக்கள் தொடர்பு : ரேகா சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் ‘லட்சுமிகாந்தன் கொலை வாழக்கு’, படம் சமூக அக்கறை கொண்ட திரைப்படமாக உருவாகி வருகிறது. முதல் பார்வையை வெளியிட்டு, படக்குழுவுக்கு ஆதரவு அளித்த இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு, ‘லட்சுமிகாந்தன் கொலை வாழக்கு’ படக்குழு சார்பாக இதயம் கனிந்த நன்றிகள்.

