A well-known ‘PATHWAY TO WELLENESS CLINIC’s new location Opening Ceremony was a successful one ரொறன்ரோ வாழ் மக்களால் நன்கு அறியப்பெற்ற ‘PATHWAY TO WELLENESS CLINIC நிலையத்தின் புதிய சிகிச்சை நிலையத் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

கடந்த பல வருடங்களாக கென்னடி-பின்ச் சந்திப்பிற்கு அருகில் இயங்கிவந்த, ரொறன்ரோ வாழ் மக்களால் நன்கு அறியப்பெற்றதும் டாக்டர் நெலன்ரைன் யேசுதாசன் அவர்களை தலைமை வைத்தியராகக் கொண்டதுமான ‘PATHWAY TO WELLENESS CLINIC நிலையத்தின் புதிய சிகிச்சை நிலையத் திறப்பு விழா கடந்த 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று மார்க்கம் நகரில் சிறப்பாக நடைபெற்றது. 7595 Markham Road Unit 19 Markham -L3S 0B6 என்னும் விலாசத்தில் அமைந்து சிகிச்சை வளாகத்தின் திறப்பு விழாவிற்கு மார்க்கம்-தோர்ன்ஹில் தொகுதியின் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டார். விசேட விருந்தினராக மார்க்கம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மா அவர்களின் பிரதிநிதியான Deepak Talreja அவர்களும் கலந்து கொண்டார். அழைக்கப்பெற்ற பல நண்பர்கள் – வாடிக்கையாளர்கள்- வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என சிகிச்சை வழங்கும் வளாகம் அன்று விருந்தினர்களால் நிறைந்து காணப்பெற்றது.

டாக்டர் நெலன்ரைன் யேசுதாசன் அவர்களும் அவரது துணைவியாரும் இணைந்து தொடர்ந்து வசதியான ஒரு இடத்தில் அவர்களது சிகிச்சை நிலையத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என அனைவரும் வாழத்திச் சென்றனர். வாழ்த்துத் தெரிவிக்க விரும்புவோர் 437 349 8404 என்னும் இலக்கத்தை அழைக்கவும். Roundtable Discussion with the Sri Lankan Bisuness Delegation’ hosted in Scarborough, by Canada -Sri Lanka Business Convention கனடா-இலங்கை வர்த்தக நட்புறவுக் கழகம்  ஸ்காபுறோவில் நடத்திய இலங்கையின் வர்த்தக தூதுக்குழுவினருடனான வட்டமேசை கலந்துரையாடல்

கனடா வாழ் வர்த்தகப் பிரமுகர்களான திரு கணேசன் சுகுமார் மற்றும் குலா செல்லத்துரை ஆகியோரை முக்கிய இயக்குனர்சபை உறுப்பினர்களாகக் கொண்ட கனடா-இலங்கை வர்த்தக நட்புறவுக் கழகத்தின் எற்பாட்டில் இம்மாதம் 3ம் திகதி திங்கட்கிழமையன்று காலை தொடக்கம் மாலை வரை ஸ்காபுறோவில் நடைபெற்ற இலங்கையின் வர்த்தக தூதுக்குழுவினருடனான வட்டமேசை கலந்துரையாடல்யுடன்; மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் விருந்துபசாரம் ஆகியன சிறப்பாக நடைபெற்றன. காலை தொடக்கம் நடைபெற்ற இந்த பயனுள்ள வர்த்தகக் கலந்துரையாடல்களில் கனடாவிலும் இலங்கையிலும் வர்த்தகத் துறையில் வெற்றிகரமாக பயணிப்பவர்களும் அத்துடன் கனடாவிலும் இலங்கையிலும் தங்கள் வர்த்தக முதலீடுகளைக் கொண்டு வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்புகின்றவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். கனடா இலங்கை வர்த்தகக் கழகம் மற்றும் அனைத்துலக இலங்கை வர்த்தகர்கள் கழகம் போன்ற சர்வதேச அமைப்புக்களில் முக்கியமான தலைமைப் பதவிகளை வகிக்கும் திரு குலா செல்லத்துரை பல அமர்வுகளுக்கு தலைமை வகித்தார். அன்றை கலந்துரையாடல்களில் சுற்றுலாத்துறை. தகவல் தொழில் நுட்பம். பல்வேறு உற்பத்தித் துறைகள், உயர் கல்வி என பல துறைகளில் உள்ள வாய்ப்புக்கள் பற்றியும் கலந்துரையாடப்பெற்று பல வெற்றிகரமான முடிவுகள் எடுக்கப்பெற்றதாகவும் செய்தியாளர்களிடம் உரையாடிய திரு குலா செல்லத்துரை தெரிவித்தார்.

அங்கு எடுக்கப்பெற்ற படங்களில் சிலவ்ற்றில் இலங்கை மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வர்த்தக வெற்றியாளர்கள் காணப்படுகின்றார்கள்.

————-சத்தியன்- கனடா (புகைப்படங்கள்- தமிழ்மிறர் சார்ள்ஸ் தேவசகாயம்)