யாழ்ப்பாணத்தில் 1974ம் ஆரம்பிக்கப்பெற்று தற்போது கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்’ அனைத்துலக மாநாடடை 2027 மே மாதம் 14ம் 15ம் 16ம் திகதிகளில் ரொறன்ரோ மாநகரில் நடத்துவது என்ற தீர்மானம்11-11-2025 செவ்வாய்க்கிழமையன்று ஸ்காபுறோவில் உள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்ற இயக்குனர் சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பெற்றது.
அன்றையை கூட்டத்தில் இயக்கத்தின் அகிலச் செயற்குழுவின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் அவர்கள் இணையவழி ஊடாகக் கலந்து கொண்டார். நேரடியாக கலந்து கொண்டவர்கள். கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க அகிலச் செயற்குழுவின் தலைவர் சிவா. கணபதிப்பிள்ளை, இயக்கத்தின் கனடா கிளைத் தலைவரும் அகிலச் செயற்குழுவின் சர்வதேச ஊடகத்துறை பொறுப்பாளருமான லோகன் லோகேந்திரலிங்கம். இயக்கத்தின் அகில செயற்குழுவின் உதவிச் செயலாளர் ஆர். ஆர். ராஜ்குமார் இயக்கத்தின் அகில செயற்குழுவின் பொருளாளர் மோகன் பாலசுப்பிரமணியன் மற்றும் இயகத்தின் கனடாக் கிளையின் பொருளாளர் ராம்சங்கர் சிவநாதன் ஆகியோர் ஆவர்.
மேற்படி கூட்டத்தில் சில அவசரமான தீர்மானங்கள் எடுக்கப்பெற்றன. அவற்றுள் மலேசியாவிலும். தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் சட்டவிரோதமாக இந்த புனிதமான இயக்கத்தைப் பயன்படுத்தி தங்கள் விருப்பத்திற்கும் சுய விளம்பரத்திற்குமாக கிளைகளை ஆரம்பித்து அதற்காக பொய்யான தகவல்களை வழங்கி அரசாங்கத்தில் பதிவுகளை செய்துள்ள ‘புல்லுருவிகளை’ சட்டத்தின் முன்பாகக் கொண்டு வர உடனடியாக கனடாத் தலைமையகம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் பற்றி தீவிரமான உரையாடப்பெற்று அவற்றை செயலாளர் நாயகத்தின் கவனத்திற்கு எழுத்து மூலம் அனுப்புவது என்றும் தீர்மானிக்கப்பெற்றது.
அத்துடன் 1996ம் ஆண்டு அமரர் செல்லையா அவர்கள் தலைமையில் பிரமாண்டமான முறையில் ரொறன்ரோ மாநகரில் நடத்தப்பெற்றது போன்று மற்றுமொரு அனைத்துலக மாநாடடை 2027, மே மாதம் 14ம் 15ம் 16ம் திகதிகளில் ரொறன்ரோ மாநகரில் நடத்துவது என்ற தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பெற்றது. அத்துடன் இந்த மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளை 2026ம் ஆண்டு தைத்திருநாளான பொங்கல் தினத்திலிருந்து ஆரம்பிப்பது என்றும் முடிவு செய்யப்பெற்றது
மேலும் கம்போடியா தமிழ்ச் சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்’ சார்பாக கனடாவிலிருந்து மூன்று இயக்குனர் சபை உறுப்பினர்கள்’ கம்போடியாவில் நடைபெறவுள்ள எதிர்வரும் நவம்பர் 22ம் 23ம் திகதிகளில் நடைபெறவுள்ள ‘ராஜேந்திர சோழ பெருமன்னன் கடாரத்தை வென்ற 1000வது ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அதற்காக இயக்கத்தின் கனடா கிளைத் தலைவரும் அகிலச் செயற்குழுவின் சர்வதேச ஊடகத்துறை பொறுப்பாளருமான லோகன் லோகேந்திரலிங்கம். இயக்கத்தின் அகில செயற்குழுவின் பொருளாளர் மோகன் பாலசுப்பிரமணியன் மற்றும் இயகத்தின் கனடாக் கிளையின் பொருளாளர் ராம்சங்கர் சிவநாதன் ஆகியோர் தங்கள் பொருட்செலவில் அங்கு செல்வதற்கும் தீர்மானக்கப்பெற்றது.
இங்கே காணப்படும் படங்கள் அன்றைய இயக்குனர் சபைக் கூட்டத்டதில் எடுக்கப்பெற்றவையாகும்.

