சிறிய படங்களுக்கு திரையரங்கு கிடைபதில்லை – ஆர்.வி.உதயகுமார் வேதனை

எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில்  உருவாகியுள்ள படம்  வள்ளிமலை வேலன். இபடத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “வள்ளிமலை வேலன் படத்தின் பாடல்கள் பார்த்தேன் அப்பா பாடல் மிக அருமையாக இருந்தது. சுரேந்தர் பாடியுள்ளார், என் படத்தில் பாடல்  பாடியவர், நண்பர்கள் நாங்கள், சினிமா பல அழகான உறவுகளைத் தருகிறது. இயக்குநர் வி.சேகர், இப்போது சினிமா இருக்கும் மோசமான நிலையை அருமையாகப் பேசினார். இப்போது சினிமா உண்மையிலேயே மிக மோசமாக இருக்கிறது. சினிமா மோசமாக இருக்க அரசு தான் காரணம், அரசு தான் முறையாக எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதை யாரும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். அந்த காலத்தில் கதை அவ்வளவு எளிதாக எல்லாம் ஓகே ஆகிவிடாது, ஒரு படம் எடுத்தால் விநியோகஸ்தர் வரை கதை சொல்ல வேண்டும். இப்போது யாராவது கதை சொல்கிறார்களா?, சினிமாவில் இருக்கும் பிரச்சனைகளைச் சரி செய்ய வேண்டும். சின்னப்படங்களை தவமிருந்து கொண்டு வருகிறார்கள், ஆனால் திரயரங்கு கிடைப்பதில்லை. *******

தயாரிப்பாளர்கள் இதையெல்லாம் முறைப்படுத்த வேண்டும். தயாரிப்பாளர் சங்கம் முடுவெடுக்க வேண்டும். இப்போது சினிமா என்றால் என்னவென்றே தெரியாத தயாரிப்பாளர்கள் தான் இன்று நிறைய இருக்கிறார்கள். பெரிய படங்களை விட சின்னப்படங்கள் தான் நிறைய ஓடுகிறது ஆனால் அதற்கான வாய்ப்பைத் தர வேண்டும். இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் அருமை, சண்டைக்காட்சிகள் நன்றாக இருந்தது. எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர். படம் மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.  

இயக்குநர் V சேகர் பேசியதாவது…வள்ளிமலை வேலன் படத்தை வாழ்த்த வந்திருக்கும் உள்ளங்களுக்கு நன்றி.  வள்ளிமலை வேலன்  படத்தை வேலூர் வள்ளிமலையில் எடுத்துள்ளார்கள், இப்போது முருகன் தான் சீசன் தான் போல, அரசியலிலும் முருகன் மாநாடு நடக்கிறது, சினிமாவிலும் முருகன் வந்திருக்கிறார். இப்படம் பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள். இந்தப்படத்திற்கேற்ற மாதிரி கதாநாயகன், காதாநாயகி பொருத்தமாக நடித்துள்ளனர். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் எல்லோரும் நன்றாகச் செய்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துக்கள். இப்போது படம் எடுப்பது பாதி வேலை தான், அதை புரமோட் செய்வது தான் முக்கிய வேலையாக உள்ளது. அதைச் சரியாகச் செய்ய வேண்டும். நாங்கள் படம் எடுக்கும் போது எத்தனை பெரிய படமாக இருந்தாலும் 250 தியேட்டருக்கு மேல் தர மாட்டார்கள், ஆனால் இப்போது கேட்டை திறந்து விட்ட மாதிரி 1000 திரையரங்குகளில் பெரிய  படம் மட்டும் தான் ரிலீஸாகிறது. அப்புறம் எப்படி சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைக்கும். இது மாற வேண்டும். படத்தை நல்ல தியேட்டர் பார்த்து ரிலீஸ் செய்யுங்கள்.  வாழ்த்துக்கள் நன்றி.

தயாரிப்பாளர் மற்றும் நாயகன் நாகரத்தினம் பேசியதாவது… எங்களை வாழ்த்த வந்துள்ள கலைத்துறை ஜான்பவான்ங்களுக்கு நன்றி, எத்தனையோ ஜாம்பவான்ங்கள் கோலோச்சிய இந்த கலைத்துறையில் நானும் பங்கேற்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனக்கு உங்கள் ஆதரவைத் தந்து வாழ்த்துங்கள் நன்றி.