‘மில்லியன் டாலர் பப்ளிகேஷன்’ தொடக்கம்

திரைத்துறையில் புதிய திறமைகளை அடையாளப்படுத்தியது போலவே, எழுத்துலகிலும் ஆரோக்கியமான மாற்றத்தை விதைக்க “மில்லியன் டாலர் பப்ளிகேஷன்” தனது பயணத்தை தொடங்கியுள்ளது. இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்துவதும், அவற்றை எதிர்காலக் காட்சி ஊடகங்களுக்கான வலுவான அடித்தளமாக மாற்றுவதுமே இதன் முதன்மை நோக்கம். இதன் நிறுவனர் யுவராஜ் கணேசனின் வழிகாட்டலின்படி பதிப்பாளர்  யுவராஜ் கணேசன், துறைத் தலைவர் புளியந்தோப்பு மோகன், முதன்மைப் பொறுப்பாசிரியர் ஷாஜன் கவிதா, தலைமை வடிவமைப்பு ரேவதி ஆகியோர் செயல்படுகிறார்கள்.