யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, படத்தில் இருண்ட மர்மமான உலகத்தின் இன்னொரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது. அதில் முக்கியமாக, நயன்தாரா நடித்துள்ள ‘கங்கா’ கதாபாத்திரத்தின் பதாகை தற்போது வெளியாகி பெரும் கவனம் பெற்றுள்ளது. அதிரடி, அழகு, ஆற்றல் என அனைத்தையும் ஒருங்கே தாங்கிய இந்த தோற்றம், யாஷின் கனவுப் படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய சக்தியாக இருப்பதை உறுதி செய்கிறது.*******
தனித்துவமான நடிப்பு திறமை, உணர்வுப்பூர்வ வெளிப்பாடு மற்றும் வலுவான திரை ஆளுமை கொண்ட நடிகையாக நீண்ட காலமாக கோலோச்சி வரும் நயன்தாரா, டாக்ஸிக் படத்தில் இதுவரை தோன்றாத ஒரு புதிய பாத்திரத்தில் தோன்றுகிறார். இருள் நிறைந்த இந்த உலகத்தில், அவரது இருப்பே ஒரு வலுவான அடையாளமாக திகழ்கிறது. கங்கா என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா, அச்சமற்ற துணிச்சலுடனும், கம்பீரமான அமைதியுடனும் திரையில் தோன்றுகிறார். கையில் துப்பாக்கியுடன், செழுமையான கேசினோ ( grand casino) பின்னணியில் நின்று கொண்டு, அந்த இடத்தையே கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் காட்டுகிறார். அழகும் ஆபத்தும் கலந்த அந்த தோற்றம், கதாபாத்திரத்தின் ஆழத்தையும் மர்மத்தையும் வலுவாக வெளிப்படுத்துகிறது.

