மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுவாஷிகா, அஜய் தீஷன், சக்தி, பாடினி குமார், காவியா அனில், கருணாஸ், லிஜோமோல், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனிஷ்காந்த், ஜான்சன், பக்ஸ், வினோதினி ஆகுயோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “நூறு சாமி”. இளம் வயதிலேயே கணவனை இழந்த. கைப்பெண்ணாக இருக்கிறார் சுவாஷிகா. அவருக்கு ஆஜய் திஷானும் சக்தியும் இரு மகன்கள் இருக்கின்றார்கள். இரு மகன்களும் வாலிப பருவத்தை அடைந்த பிறகு சுவாஷிகா மறுமணம் செய்து கொள்ள விரும்புகிறார். ஆனால் அவரது இரு மகமகன்களும் முதலில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். பிறகு சில ஆண்டுகள் கழித்து த்ந்ன் அம்மாவுக்கு ஒரு துணை தேவை என்பதை உணர்கிறார்கள். ஆனால் இப்போது சுவாஷிகாவுக்கு வயது 42 ஆகிவிடுகிறது. இருந்தாலும் பரவாயில்லை என்று சுவாஷிகாவின் சம்மதத்தோடு இருமகன்களும் அம்மாவுக்கு மாப்பிள்ளை தேடுகிறார்கள். மனைவியை இழந்த விஜய் ஆண்டனியை அம்மாவுக்கு பேசி திருமணத்க்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை இரு மகன்களும் செய்துவரும் வேலையில் அவ்வூர் பஞ்சாயித்துக்காரர்கள் சுவாஷிகா – விஜய் ஆண்டனியின் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள்? அந்த எதிர்ப்பை மீறி தங்களது சுவாஷிகா – விஜய் ஆண்டனிக்கு மறுமணம் நடந்ததா? இல்லையா? என்பதுதான் கதை. இது கதையல்ல கள்ளாக்குறிச்சி என்ற ஊரில் கணவன் மனைவியை இழந்த இருபாலருக்கும் நடந்த உண்மை சம்பவத்தை திரைக்கதையாக இயக்குநர் சசி வெள்ளித்திரையில் காட்டியுள்ளார். கதாநாயகன் என்ற அடையாளத்தை தாண்டி, சிறப்பு தோற்றம் போல வந்து செல்கிறார் விஜய் ஆண்டனி. கதையின் நியாயத்தை உணர்ந்து நடித்திருக்கும் அவரை பாராட்டலாம். இப்படியும் நடிக்க முடியுமா? என்ற ரீதியில் வெளுத்து வாங்கியிருக்கிறார், சுவாசிகா. மனதின் ஆசைகளை பூட்டி வைத்து சமூகத்தில் பலியாடுகளாக சுற்றும் பெண்களின் மனநிலையை கண்ணாடியாய் பிரதிபலித்துள்ளார். மகன்களுடன் அமர்ந்து சாப்பிடும்போது கலக்கத்தில் அவர் கதறி அழும் ஒரு காட்சி நெகிழ்ச்சி. கன்னியாஸ்திரியாக வரும் லிஜோமோல் ஜோஸ் மூலமாக எதார்த்தத்தை சொன்ன விதம் சிறப்பு. கருணாசின் அனுபவ நடிப்பு பளிச்சிடுகிறது. பாலாஜி சக்திவேல், காவ்யா அனில், பாதினிகுமார் என அனைவருமே சிறப்பான தேர்வு.
தர்ஷன் கிர்லோஷ் ஒளிப்பதிவில் கிராமத்து பசுமை கண்கூசுகிறது. பாலாஜி ஸ்ரீராம் இசை மனதை வருடுகிறது. உணர்வுப்பூர்வமான எதார்த்த காட்சிகள் படத்துக்கு பலம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இக்கதையில் ஒற்றை பெற்றோரின் வலி நிறைந்த வாழ்க்கையை சொல்லியதுடன், அம்மாவை மனுஷியாக மதிக்க வேண்டும் என்ற கருத்தை ஆழமாக சொல்லி மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் சசி. வயோதிக காலத்திலும் துணை தேவை என்பதை இப்படம் மூலம் சொல்லியிருக்கும் இயக்குநர் சசியை பாராட்ட வேண்டும்.

