புது தில்லி, மத்திய நேரடி வரிகள் வாரியம், அனைத்து இந்திய பேட்மிண்டன் போட்டி சென்னை 2025ஐ, சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், பிப்ரவரி 28, 2025 மற்றும் மார்ச் 1, 2025 ஆகிய இரு தினங்கள் வெற்றிகரமாக நடத்தியது. பேட்மிண்டன் போட்டியை பிப்ரவரி 28, 2025 அன்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ – ஐபிஎல் அணியின் தலைவர் திரு. ருதுராஜ் கெய்க்வாட் அவர்கள், சென்னை, வருமான வரித் தலைமை ஆணையர் டாக்டர் D. சுதாகர ராவ், இ.வ.ப. அவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை மற்றும் இந்தியா முழுவதும் உள்ள வருமான வரித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர். இந்த பேட்மிண்டன் போட்டியானது பல்வேறு வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்களுக்காக, 25 பிரிவுகளில் நடத்தப்பட்டது மேலும் பேட்மிண்டன் போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து வருமான வரித்துறையின் சுமார் 200 அதிகாரிகள்/அலுவலர்கள் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்றனர்.
அனைத்து இந்திய பேட்மிண்டன் போட்டி, 2025, மார்ச் 01 ஆம் தேதி நிறைவு விழாவுடன் முடிவுற்றது. சென்னை, வருமான வரி முதன்மை ஆணையர் டாக்டர் D. சுதாகர ராவ், இ.வ.ப. மற்றும் முதன்மை விருந்தினராக உலக செஸ் சாம்பியன் மற்றும் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (FIDE) துணைத் தலைவர் திரு. விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் நிறைவு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முதன்மை விருந்தினர் திரு. விஸ்வநாதன் ஆனந்த் உரையாற்றுகையில், இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். போட்டியில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை, வருமான வரி முதன்மை ஆணையர் டாக்டர் D. சுதாகர ராவ், இ.வ.ப. மற்றும் முதன்மை விருந்தினர் திரு. விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் பரிசு மற்றும் விருதுகளை வழங்கினர். போட்டியில் பங்கேற்றவர்கள் இந்நிகழ்வில் தங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை வழங்கினர். நன்றியுரை மற்றும் தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.