ரேசர் எண்டர் பிரைசஸ் வழங்கும் தயாரிப்பாளர் ரேஷ்மா தயாரிப்பில், சரீஷ் இயக்கி, நாயகனாக நடிக்க, தம்பி ராமையா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “மதர்”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இன்றைய நவீன காலகட்டத்தில் கணவன் மனைவி உறவு சிக்கலனாதாக மாறியுள்ளது.ஒரு சிறு சந்தேகம் ஒரு நல்ல உறவையும் கெடுத்துவிடும். நவீன கால தம்பதிகளின் உறவுச்சிக்கலை மையப்படுத்தி, ஒரு அழகான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. எழுத்தாளர் ரூபன் கதை வசனம் எழுதியுள்ளார். பிரபல இயக்குநர் வின்செண்ட் செல்வா, இப்படத்தின் திரைக்கதை எழுதியிருப்பதுடன் தயாரிப்பு மேற்பார்வை பணிகளையும் செய்துள்ளார். குடும்பத்தோடு அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், ஒரு அழகான கமர்ஷியல் படமாக, இப்படத்தை இயக்கியிருப்பதுடன் நாயகனாகவும் நடித்துள்ளார் சரீஷ். மேலும் அடுத்தடுத்து மேலும் பல சிறப்பான படங்களை இயக்கி நடிக்கவுள்ளார்.*******
இப்படத்தில் சரீஷ் நாயகனாக நடிக்க,அர்திகா நாயகியாக நடித்துள்ளார். நடிகர் தம்பி ராமையா இதுவரை ஏற்றிராத புதுமையான பாத்திரத்தில், சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளார். இப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் கொடைக்கானலில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
தொழில் நுட்ப குழு விபரம் இயக்கம்: சரிஷ் தயாரிப்பு: ரேஷ்மா கே கதை, வசனம்: ரூபன் திரைக்கதை : வின்சென்ட் செல்வா ஒளிப்பதிவு: வெங்கடேஷ் இசை: ஆர் தேவராஜன் எடிட்டர்: சாம் லோகேஷ் ஸ்டண்ட்: விஜய் ஜாக்கார் பாடல் வரிகள்: K.U.கார்த்திக் ஸ்டில்ஸ்: பவிஷ் மக்கள் தொடர்பு : மணி மதன் விளம்பர வடிவமைப்பு : குமரன் K *PRO R.MANI MADHAN*