சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நித்யாமேனன், யோகிபாபு, செம்பன், சரவணன், ஆர்.கே.சுரேஷ், காளிவெங்ஜட், மனாமந்தினி, தீபா சங்கர், ஜானகி சுரேஷ், அருள்தாஸ், சென்றாயன், ஆகியோர் நடித்க்து வெளிவந்திருக்கும் படம் “தலைவன் தலைவி”. மதுரையில் புரோட்டாக் கடை வைத்ஹிருக்கிறார் விஜய்சேதுபதி. அவருக்கும் நித்யா மேனனுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப்பிறகு உறவுக்காரர்களால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை நடக்கிறது. இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். பிரிந்த விஜய்சேதுபதியும் நித்யா மேனனும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் கதை. இயக்குநர் பாண்டியராஜன் குடும்ப உறவுகளை வைத்து திரைபடம் இயக்குவதில் வல்லவர். அவர் இயக்க்ம் படங்கள் அனைத்தும் குடும்ப உறவுகளே மையக்கருவாக இருக்கும். இப்படமும் அதே பாணிதான். குடும்பங்களில் அன்றாட நடக்கும் பிரச்சனைகளை பார்வையாளர்கள் கண்முன்னே நிறுத்துகிறார் இயக்குநர். விஜய் சேதுபதி, நடிப்பில் அசத்தியுள்ளார். நித்யா மேனன் நடிப்பில் சதம் அடித்திருக்கிறார். யோகி பாபு நகைச்சுவையை மழையென பொழிந்திருக்கிறார். சரவணன் – தீபா சங்கர், செம்பன் வினோத் – ஜானகி சுரேஷ் ஆர்.கே.சுரேஷ், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் அருமையாக இருக்கிறது*****
“தலைவன் தலைவி” திரைபட விமர்சனம்
