செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை” வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன்னோட்டத்தை நடிகர் தனுஷ் சமூகவலைத் தளத்தில் வெளியிட்டு, படக்குழுவினரை வாழ்த்தினார். முன்னோட்டக் காணொளியில் காவலதிகாரியான விக்ரம் பிரபு ஒரு இளம் குற்றவாளியை அழைத்துச் செல்வதும், அவரிடமிருந்து குற்றவாளி தப்பித்து விட அதைத்தொடர்ந்த பரபரப்பான சம்பவங்களும் விறுவிறுப்பாக காட்டப்படுகிறது. இடையில் ஒரு இளம் ஜோடியின் காதலும் மனதை ஈர்க்கும் வகையில் காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதாப்பாத்திரமும் மிக அழுத்தமாகவும், ஒவ்வொரு காட்சியும் உணர்வுபூர்வமாக, நமக்கு புது அனுபவம் தரும் இந்த முன்னோட்டக் காணொளி ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் லலித் குமார் மகன் அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார்.******
விக்ரம் பிரபு நடிக்கும் “சிறை” டிச.25ல் வெளியீடு
