பேரரசு உண்மையிலேயே வில்லன்தான் – ஆர்.வி. உதயகுமார்

ஸ்ரீ ரங்கநாதர் மூவி மேக்கர்ஸ் சார்பில், வியாப்பியன் தேவராஜ், சதா குமரகுரு, தமிழ் சிவலிங்கம் தயாரிப்பில், இயக்குநர்  பாரதி சிவலிங்கம் இயக்கத்தில், விளிம்பு மனிதர்களுடைய வாழ்வின் வலியைச் சொல்லும் ஒரு ஆழமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம்  “சென்ட்ரல்” . ஜூலை 18 ஆம்  தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா  நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேசுகையில், “1980 பிப்ரவரியில் நான் சென்ட்ரலில் வந்து இறங்கினேன், டிக்கெட் எடுத்து நியாயமாகத் தான் வந்தேன். சென்னை என்றாலே சென்ட்ரல்  ஸ்டேஷன் தெரியாதவர்கள் இருக்க முடியாது. சென்னையில் இருப்பவர்கள் பார்த்தாலே இந்தப்படம் வெற்றிதான். இந்த தலைப்பே மிக ஈர்ப்பாக அமைந்துவிட்டது. ஒரு விஞ்ஞான ஆசிரியர், 2 தமிழ் ஆசிரியர்  சேர்ந்து, இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள். இந்த விழாவிற்கு வந்ததற்கு காரணம் என் அன்பு தம்பி, இயக்குநர் சங்க செயலாளர் பேரரசு தான். இரண்டு வாரம் முன் ஒரு கிளிப் அனுப்புயிருந்தார், அதைப்பார்த்தவுடன் பிடித்திருந்தது. உண்மையிலேயே நடிப்பில் அசத்திவிட்டார். பேரரசு உண்மையிலேயே வில்லன் தான், மிரட்டியே எல்லோரையும் வர வைத்துவிட்டார். அவருக்கு பயந்து தான் கே எஸ் ரவிக்குமார் வந்துள்ளார்.*****

சரியான ஆளைத்தான் வில்லனாக போட்டுள்ளீர்கள். நான் சென்னை வருவதற்கு முன்னர் என் வாழ்வில் நடந்ததெல்லாம் இப்படத்தில் வந்துள்ளது. மிக அருமையாக எடுத்துள்ளார்கள். அப்போதெல்லாம் 300 ரூபாய் சம்பாதித்தால், பொண்ணே தருவார்கள் ஆனால் சினிமாகாரனுக்கு பொண்ணு தர மாட்டார்கள். சினிமாக்காரன் என்றாலே மதிக்க மாட்டார்கள். சினிமாக்காரன் அரசியலுக்கு வரக்கூடாதென சொல்கிறார்கள், அப்படி யாரும் சொல்ல முடியாது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், வந்த பிறகு என்ன செய்கிறார்கள் என்பது தான் முக்கியம்.  சினிமாக்காரனை  அரசியலுக்கு வரக்கூடாதென சொல்ல யாருக்கும் உரிமையில்லை.  படத்தில் நாயகன் விக்னேஷ் மிக இயல்பாக நன்றாக நடித்துள்ளார். அனைத்து கலைஞர்களும் மிக சிறப்பாகச் செய்துள்ளனர். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். 

தயாரிப்பாளர் தமிழ் சிவலிங்கம் பேசியதாவது: எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி. நம்முடைய   இயக்குநர்  பாரதி இந்த ஒன் லைன் சொன்னார், அதைக் கேட்டவுடன் அது என் வாழ்க்கையில் நடந்திருந்ததால், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போதெல்லாம் லீவு நாட்களில் வேலைக்கு போய் விடுவேன், அந்த கஷ்டத்தை சொன்னபோதே, இந்தப்படத்தை எடுக்கலாம் என முடிவு செய்து விட்டேன். இப்படத்தில் நாயகனாக காக்கா முட்டை விக்னேஷ் நடிக்கிறார் என்றவுடன் மிகவும் மகிழ்ச்சி. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் பேரரசு என்றவுடன் எனக்கு இன்னும் மிகப்பெரிய மகிழ்ச்சி. மிகப்பெரிய இயக்குநர் எங்களுடன் இணைந்திருப்பது, எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. எங்களை வாழ்த்த வந்த அனைத்து பெரியவர்களுக்கும் நன்றி. சிறப்பான இசையை தந்த இலா சார் அவர்களுக்கு நன்றி. விக்னேஷ் சோனி இருவரும் அருமையாக நடித்துள்ளனர். படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 

இயக்குநர் பாரதி சிவலிங்கம் பேசியதாவது: “எங்கள் படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. நான் அட்டகத்தி தினேஷை வைத்து ஒரு கதையை ஓகே செய்து, பல தயாரிப்பாளர்கள் பார்த்துக்கொண்டிருந்தேன் ஆனால் அது அமையவில்லை. அதன் பிறகு தான் இந்தக்கதை செய்தேன். மூன்று தயாரிப்பாளர்களும் உடனடியாக சம்மதித்து ஆபீஸ் தந்து ஆரம்பித்தார்கள். பின்னர் காக்கா முட்டை விக்னேஷ் வந்தார். இப்படத்தில் தயாரிப்பாளர்கள்  மூவர் குமரகுரு சார், சிவலிங்கம் சார், தேவராஜ் சார் மூவரும், மிகவும் கஷ்டப்பட்டு இப்படத்தை உருவாக்கினார்கள். எங்கள் படத்தில் வந்து இணைந்த ஆளுமை பேரரசு சார், எங்களுக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்து வேலை பார்த்துள்ளார். நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றிகள். இங்கு வாழ்த்த வந்தவர்கள் அனைவரும் பேரரசு சாருக்காக வந்துள்ளனர் அனைவருக்கும் என் நன்றிகள். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 

காடப்புறா கலைக்குழு படத்திற்கு ஒளிப்பதிவு செய்த  வினோத் காந்தி இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  இசை – இலா எடிட்டிங் – விது ஜீவா கலை இயக்கம் – சேது ரமேஷ்  சண்டை பயிற்சி- ஜான் மார்க் சவுண்ட் டிசைனர் – வசந்த் இணை இயக்குனர் –  கண்ணன், ராஜா சுந்தர்  ஒப்பனை – கயல் ஆடை வடிவமைப்பு – செல்வராஜ் டி ஐ  – கெட் இன் ட்ரீம்ஸ் ஸ்டியோஸ் ஸ்டில்ஸ் –  கதிர்   விளம்பர வடிவமைப்பு  – அதின் ஒல்லூர். மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ். தயாரிப்பு மேற்பார்வை –  சிவகுமார் தயாரிப்பு நிறுவனம் – ஸ்ரீ ரங்கநாதர் மூவி மேக்கர்ஸ். தயாரிப்பாளர்கள் – வியாப்பியன் தேவராஜ், சதா குமரகுரு, தமிழ் சிவலிங்கம். கதை திரைக்கதை வசனம் மற்றும் பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார் – பாரதி சிவலிங்கம்.