காரைக்குடியில் நாடகக்கலைப் பயிற்சிப் பட்டறை தொடக்கப்பட்டது. அந்த விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் சுப்பையா தலைமை ஏற்றார். காரைக்குடி மாநகராட்சி மேயர் முத்துத்துரை முன்னிலை வகித்தார். சிப்பி திரைப்பட மற்றும் ஊடக நிறுவனத்தின் இயக்குநர் அறிவுடைநம்பி வரவேற்புரை ஆற்றினார். கோவை கிளஸ்டர் மீடியா கல்லூரியின் துணைத் தலைவர் கார்த்திகேயன் அறிமுக உரை ஆற்றினார். நிறுவனத்தின் இயக்குனர் அறிவடை நம்பின் மகன் சேது நோக்க உரையாற்றினார். இந்த விழாவில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் துறைத் தலைவர் டாக்டர் செந்தமிழ்ப் பாவை, புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத் துறையின் தமிழ் வளர்ச்சிச் சிறக உறுப்பினர் கலைமாமணி முனைவர் சுந்தர முருகன் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பரிசும் சான்றிதழ்களும் அளித்து உரையாற்றினார்.
இந்த விழாவில் வீரமங்கை வேலுநாச்சியார் வரலாற்று நாடகம் நடைபெற்றது. அந்த நாடகத்தில் நடித்த நடிகர்களுக்கும் முனைவர் சுந்தர முருகன் சான்றிதழ் அளித்துப் பாராட்டினார். இந்த விழாவில் காரைக்குடியைச் சேர்ந்த பல்வேறு அறிஞர்களும் மாணவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.