விஷால் நடிப்பில் மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் மாபெறும் வரவேற்பு பெற்றது. அதனைத்தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் புதிய இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில் உறுவாக உள்ளது. ஆர்.பி. சௌத்ரி 1990 ஆம் வருடம் புது வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் சூப்பர்குட் பிலிம்ஸ் என்ற நிறுவனம் துவங்கி தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தது மட்டுமில்லாமல் பல புதுமுக இயக்குநர்களை அறிமுகம் செய்த பெருமை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. இத்திரைப்படம் அவரின் தயாரிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 99வது திரைப்படமாக உருவாக உள்ளது. இயக்குனர் ரவி அரசு இயக்கும் இந்தப் படத்திற்கு ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். முதல்முறையாக நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் ரவி அரசு கூட்டணியில் இந்த திரைப்படம் உருவாக இருக்கிறது. விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார்.*********
மதகஜராஜாவின் மாபெறும் வெற்றி கூட்டணிக்கு பிறகு மீண்டும் நடிகர் விஷால் மற்றும் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் M நாதன் இனைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தொகுப்பை NB ஶ்ரீகாந்த் கவனிக்க துரைராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். மார்க் ஆண்டனி வெற்றியை தொடர்ந்து மீண்டும் நடிகர் விஷால் உடன் இணைகிறார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார். இதில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பூஜை இன்று காலை மிகப் சிறப்பாக சூப்பர் குட் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் நடைப்பெற்றது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முதற்கட்டமாக 45 நாட்கள் நடைபெற உள்ளது. இவர்களது கூட்டணியில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷால்35 சூப்பர்குட் பிலிம்ஸ்99 என்ற படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் கார்த்தி, தம்பி ராமையா, அர்ஜெய், இயக்குனர் வெற்றிமாறன், மணிமாறன், சரவண சுப்பையா, M சரவணன், மோகன், விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம், ஒளிப்பதிவாளர் ஆர்தர் A வில்சன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் .
*நடிகர்கள்*விஷால் துஷாரா விஜயன் தம்பி ராமையா அர்ஜெய் *படக்குழு* தயாரிப்பு நிறுவனம்: சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர்: RB சௌதரி இயக்கம்: ரவி அரசு இசை அமைப்பாளர்: GV பிரகாஷ் குமார் ஒளிப்பதிவாளர்: ரிச்சர்ட் M நாதன் திரைப்படத்தொகுப்பு: NB ஸ்ரீகாந்த் கலை இயக்குனர்: G துரைராஜ் உடைகள் வடிவமைப்பு: வாசுகி பாஸ்கர் மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்