தமிழ்வாணன் கதாநாயகனாக நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியது

டாம் கன்சல்டன்சி நிறுவனம் சார்பில், தமிழ்வாணன் தயாரித்து, நாயகனாக நடிக்க  தாஜ் இயக்கத்தில், உண்மைச் சம்பவத்தின் அடிப்டையில் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன்  துவங்கியது. உலகில் பணத்தை விட அதிகாரம் தான் பெரியது. இதைப் புரிந்து கொண்ட ஒருவன்,  வாழ்வில் தனக்கு கிடைக்கும் அதிகாரத்தை வைத்து என்ன செய்கிறான் என்பது தான் இந்தக்கதையின் மையம்.  அந்த இளைஞனுக்கு ஏற்படும் காதலில் வரும் பிரச்சனைகளையும், அவன் நண்பர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும்,  தன் அதிகாரத்தால் எப்படி சரி செய்கிறான் என்பது தான் இப்படத்தின் கதை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் குடும்பத்தினருடன் ரசிக்கும் காதல் நகைச்ச் கலந்து ஒரு அட்டகாசமான கமர்சியல் படமாக இப்படம் உருவாகவுள்ளது.*******

நட்டி நடிப்பில் ‘போங்கு’ படத்தை இயக்கிய  தாஜ் இயக்கும் இரண்டாவது படம். இப்படத்தை, எழுதி, இயக்குகிறார்.  நாயகனாக தமிழ்வாணன் நடிக்க  இவருக்கு ஜோடியாக  பிரபல நடிகை சாய் பிரியா நடிக்கிறார். படத்தில் மேலும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கவுள்ளனர். விரைவில் சென்னையில்  துவங்கி பரபரப்பாக நடக்கபோகும் இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.  படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

நுட்ப குழு விபரம்- தமிழ்வாணன்(நாயகன்) சாய் பிரியா(நாயகி) எழுத்து, இயக்கம்,   – தாஜ் இசை –  எம்.எஸ் ஜோன்ஸ் ரூபர்ட்  ஒளிப்பதிவு –  விஜய் எஸ் குமரன்  எடிட்டர் – லினு.எம்  கலை இயக்கம் –  தாஜ் (சங்கர்)  பாடலாசிரியர் – துரை ராஜ் & ராஜா முகமது  நடனம் – ஆனந்த் குமார் & செல்வி  ஆடை வடிவமைப்பாளர் – பிரியா புஷ்பநாதன் ஸ்டண்ட் கோரியோகிராஃபர் – வி கோட்டி |  மக்கள் தொடர்பு –  சரண்  ஒப்பனை – வீர சேகர்  புகைப்படங்கள் –  பாலாஜி  போஸ்டர் டிசைனர் –  தீரன்  லைன் தயாரிப்பாளர் – பிரபு  தயாரிப்பு மேலாளர் – நாகராஜ்  புரமோசன்ஸ் – CTC ரியாஸ்  VFX – சஞ்சய்  சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் – முகமது