திரைக்குரல் குறும்பட போட்டியின் விருது வழங்கும் விழா

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் கே.பாக்யராஜ், ஓவியர் டிராட்ஸ்கி மருது, இயக்குநர் அரவிந்த்ராஜ், இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் மணிகண்டன், நடிகர் பகவதி பெருமாள், இயக்குநர் குட்டி ரேவதி, சுகுமார் பாலகிருஷ்ணன், விகடன் ராஜசேகரன், இயக்குநர் ராகவ் மிர்தாத், இயக்குநர் சுகுமார் அழகர்சாமி, இயக்குநர் பாலமுருகன், ஊடகவியலாளர் உமாபதி கிருஷ்ணன் ஆகியோர் விருது விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர் நிகழ்வின் துவக்கத்தில் ” தமிழ் பிலிம் பேக்டரி ” திரைப்பட தயாரிப்பு மேலாண்மை நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டது. கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் மணிகண்டன் ஆகியோர் பெற்றுகொண்டனர். நிறுவனத்தின் இயக்குநர்கள் கருணா விலாசினி, சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.