தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை.பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராகு கேது”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தில் நடிகர் சமுத்திரகனி சிவனாகவும், கஸ்தூரி துர்கையாகவும், விக்னேஷ் மகாவிஷ்ணுவாகவும் நடித்துள்ளனர். மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். கதை, வசனம், பாடல்கள் எழுதியுள்ளார் கலைமாமணி கே.பி.அறிவானந்தம். இயக்குந்ர தமிழ்மாமணி துரை.பாலசுந்தரம் இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் சாந்தி பாலசுந்தரம் தமிழரசன் தியேட்டர் சார்பில் தயாரிக்க, ஆனந்த், உமாதேவி இணை தயாரிப்பு செய்துள்ளனர்.*****
தொழில் நுட்ப குழுவில் மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் பரணிதரன் பின்னணி இசையமைத்துள்ளார், கிட்டாரிஸ்ட் சதானந்தம் மூன்று பாட்டுகளுக்கு இசை அமைத்துள்ளார், எடிட்டிங் பணிகளை B.லெனின் மேற்கொண்டுள்ளனர். இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வரும் ஆகஸ்ட் மாதம் 8 தேதி வெளியாகிறது.