டி.ஜி.விஷ்வ பிரசாத், கிரித்தி பிரசாத் தயாரிப்பில், மாருதி இயக்கத்தில் பிரபாஸ், சஞ்சய் தத், பூமன் இரானி, மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார், ஜரினா வஹாப் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ராஜாசாப்”. அனாதையான பிரபாஸ் ஒரு பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். பாட்டியின் கணவர் சஞ்சய் தத் ஒருநாள் காணாமல் போய்விடுகிறார். காணாமல்போன தனது கணவர் சஞ்சய் தத்தின் நினவாகவே பாட்டி இருப்பதால், சஞ்சய்தத்தை கண்டுபிடிக்க புறப்படுகிறார் பிரபாஸ். சமுத்திரக்கனியும் சஞ்சய் தத்தை தேடுகிறார். சஞ்சய் தத் யார்? அவர் என்ன ஆனார்? பிரபாஸ் சஞ்சய் தத்தை கண்டுபிடித்தாரா? இல்லையா? சமுத்திரக்கனி ஏன் சஞ்சய் தத்தை ஏன் தேடுகிறார் என்பதுதான் கதை. மூன்றுமணி நேரம் ஓடுகின்றபடத்தை பிரபாஸ் தன் தோளில் சுமந்திருல்கிறார். நித்தி அகர்வாலுடனும் மாளவிகா மோகனனுடனும், ரித்தியுடனும் காதல் லீலைகளில் குதூகலமாக ஆடிப்பாடி கலக்கும் காட்சிகள் அவரின் ரசிககர்களுக்கு செம விருந்தாக அமைந்திருக்கிறது. உச்சக்கட்ட காட்சியில் நகைச்சுவையாளராக மாறி திரையரஙகை சிரிப்பலையில் மிதக்கவிட்டிருக்கிறார். இப்படத்யில் மாறுபட்ட ஒரு கோணத்தில் பிரபாஸ் நடித்திருப்பது பாராட்டத்தக்கது. அனுபவமிக்க சஞ்சய் தத் தனது நடிப்பால் திரையரங்கை அதிரவைக்கிறார். கவர்ச்சி கஜானாவாக காட்சியளிக்கிறார்கள் நித்தி, ரித்தி, மாளவிகா ஆகிய மூவரும். கவர்ச்சியை தலைவாழையிலையில் பரிமாறியிருக்கிறார்கள். இடைவேளையின் நெருக்கத்தில்தான் கதை சூடுபிடிக்கிறது. தந்திரக்காட்சிகள் கைத்தட்ட வைக்கின்றன. கதைக்களத்யிற்கேற்ற பின்னணி இசையை தந்திருக்கிறார் இசையமைப்பாளர் தமண். ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனியின் உழைப்பு திரையில் பளிச்சிடுகிறது. கதை பழைய சோறுதான். அதை பிரியாணியாக்கியிருக்கும் இயக்குநர் மாருதியின் சாமர்த்தியும் பாராட்டுதலுக்குறியது.
“ராஜாசாப்” திரைப்படம் விமர்சனம்
