பிரபாஸ் நடித்துள்ள படமான ‘தி ராஜா சாப்’ படத்தின் முன்னோட்ட விழா, நடைபெற்றது. இப்படத்தை இயக்குநர் மாருதி, பேய் மற்றும் நகைச்சுவை படமாக உருவாக்கியுள்ளார். தயாரிப்பாளர்கள் டி.ஜி. விஷ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர் இந்த படத்தைத் தயாரித்துள்ளனர். மாளவிகா மோகனன், நித்தி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.*******
நடிகை மாளவிகா மோகனன் கூறியதாவது:“தெலுங்கு திரையுலகின் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் இருக்கிறது. பிரபாஸ் போல ஒரு பான்-இந்தியா நட்சத்திரத்துடன், ‘தி ராஜா சாப்’ போன்ற ஒரு பிரம்மாண்டமான படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகுவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ரசிகர்களுக்கு பிரபாஸ் ஒரு ‘ரெபல் ஸ்டார்’, ‘ரெபல் கடவுள்’. ஆனால் எங்களுக்கெல்லாம் அவர் ‘ராஜா சாப்’. நல்ல மனம் கொண்ட ஒரு உண்மையான நட்சத்திரம் அவர். இந்த படத்தில் நான் ‘பைரவி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். பொதுவாக கதாநாயகிகளுக்குக் காதல் காட்சிகள், பாடல்கள் மட்டுமே கிடைக்கும். ஆனால் இந்த படத்தில் மாருதி சார் எனக்குக் காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்தையும் செய்யும் வாய்ப்பை அளித்தார். பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் எல்லா அம்சங்களும் நிறைந்த படமாக ‘தி ராஜா சாப்’ இருக்கும். அனைவரும் திரையரங்குகளில் இந்த படத்தைக் கண்டிப்பாக ரசிப்பீர்கள்.”

