நடிகர் மனோஜ் பாரதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம்

“இயக்குனர், நடிகர் மனோஜ் பாரதியின் திடீர் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தையும் மீளா துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆசை மகனை இழந்து ஈடு செய்ய முடியாத மாபெரும் சோகத்தில் தவிக்கும் நம்  மரியாதைக்குரிய இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் சோகத்தில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கமும் பங்கெடுக்கிறது. ஆறுதல் படுத்தவே முடியாத இந்த பேரிழப்பால் கடும் சோகத்தில் உள்ள திருமதி மனோஜ் மற்றும் குழந்தைகள் குறிப்பாக இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், வேதனையையும் தெரிவித்துக் கொள்கிறோம். மனோஜ் அவர்களின் ஆன்மா சாந்தியடைய  பிரார்த்திக்கிறோம்” என்று சங்கத்தின் சார்பில்  சங்கத்தின் தலைவர் கவிதா, பொதுச் செயலாளர் கோடங்கி ஆபிரகாம், பொருளாளர் ஒற்றன் துரை ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.