“ட்ராமா” திரைப்பட விமர்சனம்

உமா மகேஷ்வரி தயாரிப்பில் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா, சாந்தினி, சஞ்சீவ், ஆனந்த் நாக், பூர்ணிமா ரவி, பிரதோஷ், மாரிமுத்து, ரமா, பிரதீப், ஈஸ்வர், நிழல்கள் ரவி, வையாபுரி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ட்ராமா”. பிரசன்னாவும் சாந்தினியும் தம்பதிகள். இவர்களுக்கு வெகு நாட்களாக குழந்தை பிறக்கவில்லை. குழந்தையின்மைக்கு தன்னுடைய குறைபாடுதான் காரணம் என்று கணவன் பிரச்ன்னா தெரிந்து கொள்கிறார். இந்நிலையில் மனைவி சாந்தினி கர்ப்பமாகிவிடுகிறார். தனது கணவர மூலமாக தான் கர்ப்பமடைந்ததாக நினைத்திக்கொண்டிருக்கும் சாந்தினிக்கு, ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் “உன் கர்ப்பத்துக்கு உன் கணவர் காரண்மில்லை” என்று கூறி ஒரு காணொளி காட்சியும் அவரது தொலைபேசிக்கு அனுப்பி மிரட்டப்படுகிறார். இது ஒருபுறமிருக்க மற்றோரு கதையாக பூர்ணிமாரவி தனது காதலனால் கர்ப்பமாகி ஏமாற்றபடுகிறார். பாதிக்கப்பட்ட இந்த இரு பெண்களின் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? என்பதுதான் கதை. தனது எதார்த்தமான நடிப்பு மூலம் பல உணர்வுகளை கொட்டி தீர்க்கிறார் பிரசன்னா. ஆதங்கத்தை அமைதியான நடிப்பின் மூலம் வெளிபடுத்தி ரசிகர்களின் பாராட்டைப் பெறுகிறார். சாந்தினி, குழந்தை மீதான ஆர்வம், குழந்தை இல்லாத கவலை, கர்ப்பமடைந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதம்,  பிறகு அதே கர்ப்பத்தால் உருவெடுக்கும் பிரச்சனை என பல இடங்களில் அழுத்தமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். பிரதோஷ், அவரது காதலியாக நடித்திருக்கும் பூர்ணிமா ரவி இருவரும் பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தங்களது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள். விவேக் பிரசன்னாவின் நண்பராக நடித்திருக்கும் ஆனந்த் நாக் கவனம் ஈர்க்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சஞ்ஜீவ் நடிப்பிலும் குறையில்லை. மாரிமுத்து, பிரதீப் கே.விஜயன், ரமா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள். தம்பிதுரை மாரியப்பன், மருத்துவ பின்னணியில் நடக்கும் குற்ற செயல்களை மையமாக வைத்து எழுதியிருக்கும் திரைக்கதை சுவாரஸ்யமாக இருப்பதோடு, அதை சொல்லிய விதம் விறுவிறுப்பாகவும், வேகமாகவும் இருக்கிறது. மூன்று கதைகள் மூலம் தான் சொல்ல வந்த விசயத்தை வித்தியாசமாக சொல்லியிருக்கும் இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன், எதிர்பாராத திருப்பங்கள் மூலம் காட்சிக்கு காட்சி அதிர்ச்சியளித்து பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட வைத்துவிடுகிறார்.