அன்பார்முலா பிலிம்ஸ் தயாரிப்பில், ராஷ்மிகா மந்தனா , நடிக்கும் திரைப்படமான “மைசா” பூஜையுடன் துவங்கியது. ரவீந்திர புள்ளே இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படம், சுவாரஸ்யமான தலைப்பு மற்றும் கவர்ச்சிகரமான பதாகையினால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் பாரம்பரிய பூஜையுடன் தொடங்கப்பட்டது, இதில் படத்தின் முக்கியக் குழுவினர் கலந்து கொண்டனர். சுரேஷ் பாபு தொடக்கப் பலகையை அடிக்க, ரவி கிரண் கோலா கேமராவை இயக்கினார். திரைக்கதை குறிப்பேடை தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்த ஹனு ராகவபுடி, முஹூர்த் படபிடிப்புக்கு கௌரவ இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். படத்தின் வழக்கமான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்குகிறது, முதல் கட்டமாக ராஷ்மிகா படக்குழுவுடன் படப்பிடிப்பில் இணைகிறார்.*****
கோண்ட் பழங்குடியினரின் கலாச்சார பின்னணியில் வளமான மற்றும் வசீகரிக்கும் உலகில், ஆழமான கதையுடன் ஆக்சன் நிரம்பிய உணர்ச்சிபூர்வமான அதிரடி திரில்லராக “மைசா” உருவாகிறது. ராஷ்மிகா மந்தனா முற்றிலும் மாறுபட்ட, இதுவரை தோன்றியிராத அவதாரத்தில், அழுத்தமான மற்றும் உணர்ச்சி ஆழம் கொண்ட பெண்ணாக நடிக்கிறார். இப்படத்தில், சூர்யாவின் ரெட்ரோ படத்தில் பணியாற்றிய ஷ்ரேயாஸ் P. கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார் என்றும், சண்டைக்காட்சிகளை கல்கி 2898 AD-யில் பணியாற்றி புகழ்பெற்ற ஆண்டி லாங் அமைக்கிறார் என்றும் Unformula FIlms நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இசையமைப்பாளர் முதல் அடுத்தடுத்த கலைஞர்கள் குறித்து பெரிய ஆச்சரியங்களை அளிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் மற்ற தொழில்நுட்ப வல்லுநர்களைப் பற்றி அறிய ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
நடிகை: ராஷ்மிகா மந்தனா திரைப்படக்குழு: இயக்குநர், எழுத்தாளர்: ரவீந்திர புள்ளே ஒளிப்பதிவு : ஷ்ரேயாஸ் P கிருஷ்ணா சண்டைக்காட்சிகள்: ஆண்டி லாங் தயாரிப்பாளர்கள்: அஜய் & அனில் சாய்யபுரெட்டி இணை தயாரிப்பாளர்: சாய் கோபா தயாரிப்பு நிறுவனம்: Unformula Films மக்கள் தொடர்பு: சதீஷ்குமார் S2 Media