பாபி சிம்ஹா நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்

யுவா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் யுவா கிருஷ்ணா தொலட்டி தயாரிப்பில், மெஹர் யாரமாட்டி இயக்கத்தில், பாபி சிம்ஹா மற்றும் ஹெப்பா படேல் நாயகன்–நாயகியாக நடித்துள்ள புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. முகூர்த்த நேரத்தில் முதல் படபிடிப்பை எஸ்.கே.என் பலகையை சொடுக்கி ஆரம்பித்து வைத்தார், வம்சி நந்திபதி படம்பிடித்தார் தனிகில்லா பரணி படத்தின் திரைக்கதையை படக்குழுவினரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முழு படக்குழுவும் கலந்து கொண்டது. இந்த படத்தில் தனிகில்லா பரணி மற்றும் சூர்யா ஸ்ரீனிவாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜே. கிருஷ்ணா தாஸ் ஒளிப்பதிவாளராகவும், சித்தார்த் சதாசிவுனி இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார். விவேக் அண்ணாமலை கலை இயக்குநராக இருக்கிறார்.*****

இவ்விழாவில் நாயகன் பாபி சிம்ஹா பேசியதாவது: ‘வால்டேர் வீரய்யா’ படத்திற்கு பிறகு உங்களை மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தெலுங்கில் நாயகனாக ஒரு படம் செய்ய வேண்டும் என்று நினைத்தபோது பல கதைகளை கேட்டேன். ஒரு நல்ல கதைக்காக காத்திருந்த நேரத்தில் யுவா எனக்கு அழைப்பு கொடுத்தார். கதையை கேட்டவுடன் மிகவும் பிடித்தது. இது ஒரு நடிகனாக எனக்கு சவாலான கதை. என் திரைவாழ்க்கையில் இது ஒரு புதிய முயற்சி. இதில் தாத்தா கதாபாத்திரம் உள்ளது. அந்த வேடத்தை பரணி அவர்கள் செய்கிறார் என்று தெரிந்ததும் மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. அவருடன் நடிப்பது ஒரு பெரிய சந்தோஷம். ஹெப்பா ஒரு சிறந்த நடிகை. அவருடன் பணியாற்றுவதும் மகிழ்ச்சியாக உள்ளது. மிகவும் நல்ல குழுவுடன் இந்த படத்தை செய்கிறோம். தயாரிப்பாளர் யுவா மிகவும் ஆர்வமுள்ளவர். இந்த கதை சவாலானதாக இருப்பதால் உடனே ஒப்புக்கொண்டேன். டிசம்பர் 22 முதல் விசாகபட்டினத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களையும் வேண்டுகிறோம்.”

தொழில்நுட்ப குழு: தயாரிப்பாளர்: யுவா கிருஷ்ணா தொலட்டி தயாரிப்பு நிறுவனம்: யுவா புரொடக்‌ஷன்ஸ் இயக்கம்: மெஹர் யாரமாட்டி ஒளிப்பதிவு: ஜே. கிருஷ்ணா தாஸ் இசை: சித்தார்த் சதாசிவுனி கலை இயக்குநர்: விவேக் அண்ணாமலை திரைக்கதை எழுத்தாளர்கள்: வம்சி கே, யஷ்வந்த் சனா VFX: பானு உடை வடிவமைப்பு: ஸ்ராவ்யா பெட்டி பப்ளிசிட்டி டிசைனர்கள்: தானி ஏலய PRO: வம்சி சேகர், சதிஷ் (AIM)